Header Ads



யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, பிரதான சூத்திரதாரி பிரபாகரனே – சாந்த பண்டார

யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதனா சூத்திரதாரி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனேயாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை யுத்தக் குற்றவாளியாக பார்க்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியே இந்த நாட்டுக்கு யுத்த வெற்றியை ஈட்டிக் கொடுத்தார் எனவும் அதனை எவரும் மறந்து விடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச சமூத்தை வெற்றி கண்டுள்ளதுடன் உள்ளக விசாரணைகளுக்கு சர்வதேச சமூகத்தை இணங்கச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

யார் நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் அவர்களை பாராட்ட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கடந்த ஆறு ஆண்டுகளாக பேசப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கின்ற போதிலும், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உள்ள விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு வெற்றி கிட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.