Header Ads



இஸ்லாமியர்களுக்கு புகலிடம் அளிப்பது, தற்கொலை செய்வதற்கு இணையானது

இஸ்லாமியர்களுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் தற்கொலை செய்துகொள்வதற்கு இணையானது என கண்டித்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள இஸ்லாமயமாக்குதலுக்கு எதிராக செயல்படும் பெகிடா என்ற அமைப்பை சேர்ந்த மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ட்ரெஸ்டன் நகரில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜேர்மன் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கலிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

‘ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார ரீதியில் வலிமையான நாடான ஜேர்மனியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர்களுக்கு புகலிடம் அளிக்க முயற்சித்ததன் மூலம் ஏஞ்சிலா மெர்க்கல் ஜேர்மனிக்கு துரோகம் இழைத்துவிட்டார்’ என போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோஷமிட்டனர்.

தற்போது ஒரு லட்சம் என்ற எண்ணிக்கை இருந்தால், எதிர்காலத்தில் இவர்களின் பிள்ளைகளும் புகலிடம் கோரி வருவார்கள். அந்த எண்ணைக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாக சென்றுவிடும்.

வெளிநாட்டு மக்களுக்கு அடைக்கலம் அளிப்பதன் மூலம், உள்நாட்டு குடிமக்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை இந்த அரசு சீரழிக்க முயற்சித்து வருகிறது என சான்சலரை சரமாரியாக தாக்கி பேசியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் ’ஐரோப்பிய கொடியுடன் உள்ள ஒரு பெண் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொள்வது போன்ற’ ஒரு பதாகை ஏந்தியவாறு கோஷமிட்டார்.

மேலும், அந்த பதாகையில் ‘இஸ்லாமியர்களுக்கு புகலிடம் அளிப்பது என்பது ஐரோப்பிய நாடுகள் தற்கொலை செய்துக்கொள்வதற்கு சமம்’ என வார்த்தை பொறிக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஜேர்மன் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கல் நாசிச உடையில் இருப்பது போன்ற ஒரு பதாகையை ஏந்திய வாலிபரின் கோஷங்கள் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாய் நாட்டிற்கு சான்சலர் துரோகம் இழைப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம். ஜேர்மனிக்கு வருகை தரும் 1 லட்சத்து 50 ஆயிரம் அகதிகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது இந்த அரசாங்கத்துக்கு தெரியுமா என பெகிடா அமைப்பினர் கேள்விகள் எழுப்பினர்.

இந்த போராட்டம் குறித்து பேசிய பொலிசார், சிறிய அளவிலான வாய்த்தகராறு தவிர இந்த போராட்டம் மிக அமைதியான அளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.