Header Ads



"மஹிந்த ராஜபக்ச எவ்வாறு மரணிப்பதென்று, கோத்தபாய கூறுவார்" ராஜித சேனாரத்ன

மஹிந்த ராஜபக்ச அமர்வதற்கு ஆயத்தமாக இருந்த மின்சார நாற்காலியை மெத்தைகளிலான நாற்காலியாக நாங்கள் மாற்றிவிட்டோம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று களுத்துறையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

ஒரு நாள் நான் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தேன். இதன் போது, ராஜித நீங்கள் இவ்வாறு எல்லாம் கூறினீர்களா என்று மஹிந்த கேட்டார். ஆம் நான் இவற்றை கூறினேன் நாங்கள் தான் தங்களை காப்பாற்றினோம் என்று கூறினேன்.

மஹிந்த ராஜபக்ச மின்சார நாற்காலியில் அமர்வதற்கு மிகவும் விருப்பத்துடன் இருந்தார்.

இதனால் நாங்கள் அவரது மின்சார நாற்காலியை ஒதுக்கி விட்டு நல்ல மெத்தைகளிலான நாற்காலியை கொண்டு வந்தோம். 

எதிர்வரும் 05 வருடங்களுக்கு நல்ல மெத்தைகளிலான நாற்காலியில் அமர்ந்துகொண்டு நாங்கள் என்ன செய்கின்றோம் என்பது பார்க்கலாம்.

இன்று மின்சார நாற்காலி இல்லை, இன்று இந்த நிலைமை ஏற்படவில்லை என்றால் பொருளாதாரத் தடைகள் எற்படும், ஆலைகள் மூடப்பட்டு சுமார் ஒரு மில்லியன் மக்களின் வேலைகள் இழக்கப்படும்,

அத்தியாவசிய உணவு பெருட்களை பெற்றுகொள்ள பணம் இல்லாத நிலைமை, அத்தியாவசியமான மருந்து வகைகளை பெற்றுகொள்ள பணம் இல்லாத நிலைமை ஏற்படும், இதன் போது மக்கள் பாதைக்கு இறங்க நேரிடும்.

அப்படியான நிலைமை ஏற்பட்டால் என்ன நடக்கும்? மஹிந்த ராஜபக்சவின் சகோதரன் கோத்தபாய ராஜபக்ச, அண்ணா பயப்பட வேண்டாம் எவ்வாறு மரணிப்பதென்று நான் உங்களுக்கு கூறிகின்றேன் என கூறுவார்.

இது தான் நிலைமை எனினும் நாங்கள் அதனை மாற்றி விட்டோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.