Header Ads



இலங்கையில் வெளிவிவகார அமைச்சு குறித்து, ஜப்பானில் நின்று ஆத்திரப்பட்ட ரணில்

இலங்கையில் வெளிவிவகார அமைச்சு இல்லை என்றே கருதி செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை திரும்பியதும் புதிய வெளிவிவகார சேவை ஒன்று உருவாக்கப்படும்.

வெளிவிவகார அமைச்சு, தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்களில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வாக புதிய வெளிவிவகார சேவை உருவாக்கப்படும்.

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.  அதிவேக ரயில் பயணத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஊடகவியலாளர்களிடம் இந்த தகவலை வெளியிட்டார்.

ஜப்பானுக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகளின் அசமந்த போக்கு ஒத்துழைப்பு வழங்காமை குறித்து விஜயத்தில் இணைந்து கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள், பிரதமரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

“நாட்டின் பிரதமராகிய நான் இலங்கையில் வெளிவிவகார சேவை இல்லை என்று கருதியே கடமையாற்றி வருகின்றேன். எனது வெளிநாட்டு பயணங்களில் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள். நான் நாடு திரும்பியவுடன் புதிய வெளிவிகார சேவை ஒன்றை உருவாக்குவேன்” என பிரதமர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. dear prime minister, if you cant get the things done with the foreign service, think about ordinary people who need assistance from embassies etc...etc..... scary right ?

    ReplyDelete
  2. ranilin uyir thiyahi Mangala samaraweeravukku enna nadakka pohuzo....?????????

    ReplyDelete

Powered by Blogger.