Header Ads



சூடான மைத்திரி, மேடையிலேயே அமைச்சருக்கு பதிலடி கொடுத்தார் (வீடியோ)


சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த தேசிய ஆசிரியர் தின வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 06.10.2015 நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது கல்வி அமைச்சர் தெரிவித்ததாவது;

நாட்டில் சுமார் 14,000 ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற முறையற்ற ஆட்சேர்ப்பு இதற்குக் காரணமாகும். தேசிய பாடசாலைகளில் மாத்திரம் 2000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர். நேர அட்டவணை இல்லாத மேலதிக ஆசிரியர்களுக்காக நாம் வருடாந்தம் 100 கோடி ரூபாவை செலவிடுகின்றோம்.

கல்வி அமைச்சரின் இந்தக் கருத்திற்கு ஜனாதிபதி பின்வருமாறு பதிலளித்தார்;

நீங்கள் அவ்வாறு கூறுகின்றீர்கள். நான் பிரதிநிதித்துவப்படுத்தும் பொலன்னறுவையில் தற்போது 700 ஆசிரியர்களுக்கு வெற்றிடம் நிலவுகின்றது. வடமத்திய மாகாணத்தில் 1700 ஆசிரியர்களுக்கு வெற்றிடம் நிலவுகின்றது. குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் ஆசிரியர் சேவைக்குத் தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்தவர்கள் தொடர்பில் மிகப்பெரிய பிரச்சினை உள்ளது. வீடியோ

No comments

Powered by Blogger.