Header Ads



அப்பண்டி சைட்டிஸ் என்றால் என்ன..?

குடல்வால் நோய் பற்றியும் அதனை கட்டுப்படுத்துவது பற்றியும் மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, குடல்வால் நோய் (அப்பண்டி சைட்டிஸ்) என்றால் என்ன?:

குடல் வால் (அப்பண்டிஸ்) என்பது மனிதர்களின் பெருங்குடலில் உள்ள பகுதி. இடுப்பு எலும்பிற்கும் தொப்புளுக்கும் இடைப்பட்ட தூரத்தை 3 ஆக பிரித்து வரும் தூரத்தில் ஒரு பாகத்தை எலும்பில் இருந்து அளந்தால் அதன் நேர் உள்ளேதான் இது இருக்கும். புழு போன்ற அமைப்பில் உள்ள இவ்வுறுப்பில் கல் அல்லது நோய் தொற்றும் போது அதனை அப்பண்டிசைட்டிஸ் என்கிறோம்.

தேவையற்ற பாகமா?:

அறிவியல் பூர்வமாக முந்தைய காலங்களில் அப்பண்டிஸ் செயல்படாத, தேவையற்ற( Rudimentarypart) உறுப்பாக கருதப்பட்டது. ஆனால் தற்போது அதன் தசைகளின் மூலம் ஆன்ட்டி புளூயிட்ஸ் உற்பத்தி செய்வதாக கருதப்படுகிறது.

10 முதல் 30 வயது வரை:

யாருக்கு வேண்டுமானாலும் அப்பண்டிசைட்டிஸ் வரலாம். பொதுவாக 10 வயது முதல் 30 வயது வரையிலான ஆண்களிடம் அதிக தாக்கத்தை இந்நோய் ஏற்படுத்துகிறது. சிகிச்சை எடுக்காவிட்டால் இதன் தாக்கம் முற்றி உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

அறிகுறி:

தொப்புளின் இடது புறம் அழுத்தினால் வலது பக்கம் வலி தெரியும். வாந்தி அல்லது வாந்தி போன்ற அறிகுறி இருக்கும். இருமும் போது அல்லது ஆழ்ந்த மூச்சின் போது அல்லது நடக்கும் போது தாங்க முடியாத வலியால் துடிப்பார்கள். பசிகுறைவால் எடை குறையும். காய்ச்சல் (99 டிகிரி பாரன் ஹட் முதல் 102 டிகிரி ) காணப்படும். வயிற்றுபோக்கும் இருக்கலாம். வயிறு உப்பி காணப்படும். மலச்சிக்கல் இருக்கும்.

காரணங்கள்:

அப்பண்டிசில் பாக்டீரியா, ஓட்டுண்ணி, பூஞ்சை போன்றவற்றால் நோய் தொற்றுவது, குடலில் நோய் தொற்றுவது, பெருங்குடலில் அப்பண்டிஸ் ஆரம்ப இடத்தில் உள்ள சவ்வு கிழிந்து அதனுள் மலம், கல் போன்றவை சென்றால் அதிக பாதிப்பு ஏற்படும். மலச்சிக்கலும் சில நேரங்களில் காரணமாகிறது. உணவில் சேர்ந்து போகும் சிறுகற்களும் சில நேரங்களில் காரணமாகிறது.

வகைகள்:

அக்கியூட் மற்றும் கிரானிக் அப்பண்டிசைட்டிஸ் என இருவகைகள் உள்ளன.

அக்கியூட்:

இவ்வகை நோயினால் அதிகப்படியான வயிற்று வலி தாங்க முடியாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை அவதிப்படுவார்கள். வேகமாக இதன் அறிகுறி தெரிவதால் எளிதில் மருத்துவர்கள் இதனை கண்டறிய முடியும். இதற்கு உடனடி அறுவை சிகிச்சை தேவை. காரணம் முழுமையாக கல் அடைத்து பழுப்பு ஏற்பட்டு பாக்டீரியாக்களின் பாதிப்பு இருப்பதே முக்கிய காரணம்.

மேலும் நிணநீர் முடிச்சுகள் வீங்கி அழுத்தம் ஏற்பட்டு, ரத்த ஓட்டம் இல்லாமையால் பாக்டீரியா தொற்றி சீழ் வடியும். இதன் இறுதி நிலை தான் அப்பண்டிசைட்டிஸ். இதனை எளிதாக எடுக்கக்கூடாது. காரணம் ஒரு உள்ளுறுப்பு நமக்கு தெரியாமல் அழுகும் நிலை தான் என்பதை புரிந்து உடனடியாக மருத்துவரை பார்க்கவேண்டும்.

தெரிவது எப்படி?:

105 டிகிரிக்கு மேல் காய்ச்சல், தாங்க முடியாத வயிற்றுவலி, இருமல், தும்மல், வாந்தி வருவது போன்ற அறிகுறிகள் மொத்தமாக இருந்தால் நிச்சயம் அக்கியூட்டின் அறிகுறியாகும்.

கிரானிக்:

பாக்டீரியாக்களின் தாக்கத்தால் இவ்வகை நோய் ஏற்படுகிறது. இதன் ஆதிக்கம் அக்கியூட்டை விட குறைவாக இருக்கும். அறிகுறிகள் எளிதில் தென்படாது. முதலில் சிகிச்சை செய்வது நல்லது. தவறினால் அக்கியூட் என்ற மோசமான நிலைக்கு கொண்டு போகும்.

அறிகுறியும் சிகிச்சையும்:

விட்டு விட்டு வலியும் கூடவே உடல் சோர்வும் காணப்படும். இதற்கு அறுவை சிகிச்சை கட்டாயமில்லை. ஆனால் ஆன்டிபயாட்டிக் மூலம் விரைவில் சிகிச்சை மேற் கொள்ளவேண்டும்.

கண்டறிவது எப்படி?:

சிடிஸ்கேன், அல்ட்ராசவுன்ட் ஸ்கேன், லேப்பராஸ்கோபிக் மற்றும் ரத்த பரிசோதனை மூலம் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கண்டறிந்தும் இதன் தாக்கத்தை வெள்ளை அணுக்களின் சிதைவுகளின் வகையிலும் கண்டறியலாம். சிறுநீர் சோதனையில் சிறுநீரகத்தில் நோய் தொற்றின் நிலைமையை கணக்கிட்டும் கண்டறியலாம்.

சிகிச்சை:

முதல் கட்டத்தில் ஆண்டிபயாட்டிக் சிகிச்சை வழங்கப்படுகிறது. பழுத்து வெடித்து விட்டால் பழுப்பை உறிஞ்சி எடுக்கும் சிகிச்சையான இன்டர்னல் இன்டர்வால் ஓப்பன்டாக்டமி செய்யகூடும். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அப்பண்டிஸ் நீக்கப்படுகிறது. லேப்ராஸ்கோபிக் முறையிலும் நீக்கலாம்.

கடைபிடிக்க வேண்டியவை:

மலமிளக்கி, வலி நிவாரணி போன்ற மருந்துகள் பயன்படுத்தக் கூடாது. காரணம் நோயின் காரணத்தை கண்டறிய முடியாமல் போய் விடும். சுத்தமான நீர், உணவு உட்கொள்ளல் வேண்டும். நன்கு கொதிக்க வைத்த நீரை குடிக்க வேண்டும். வலி உள்ள இடங்களில் வெதுவெதுப்பான சூடு வெளிப்புறம் கொடுக்க வேண்டும். திறந்த வெளி உணவு, கரிய பொரித்த, வறுத்த அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். மலத்தை அடக்கக்கூடாது.

மூலிகை சிகிச்சை:

அக்கியூட் வகைக்கு அறுவை சிகிச்சைதான் ஒரே வழி. கிரானிக் வகையை முன்னதாக கண்டறிந்தால் அறிகுறிக்கு தக்கசிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். மூலிகைகளான மாவிலங்கம், சீந்தல் கொடி, குகுலு, தசமூலங்கள், சீரகம், சுக்கு , மிளகு, துளசி, கோரைக்கிழங்கு, கொத்தமல்லி, வெட்டிவேர், திரிபலா, நன்னாரி, கொடுவேலி உள்பட பல மூலிகைகள் மூலம் குணப்படுத்த முடியும். இதனுடன் ஆகாரத்தில் சில முறைப்படுத்துதல் தேவைப்படும்.

வீட்டு வைத்தியம்:

கொத்தமல்லி இலையை கொதிக்க வைத்து அருந்தினால் வலி குறையும். சிறு பயறை ஊற வைத்து தண்ணீரை பருகினால் அப்பண்டிசைட்டிஸ் குறையும். வெந்தயத்தை ஊறவைத்த நீரை பருகினாலும் குறையும். துளசிநீர் பருகினால் காய்ச்சல் குறையும். வெள்ளரிக்காய், கேரட், பீட்ரூட் சாறு 300 மில்லி தினம் இரு முறை அருந்தலாம்.தேனும், எலுமிச்சைசாறும் சம அளவில் கலந்து சாப்பிடலாம். இஞ்சி, பூண்டு கொதிக்க வைத்து அருந்தலாம்.

உணவு முறை:

காய்ச்சல், வலி, வாந்தி இருந்தால் திடஉணவுகளை ஓரம் கட்டி விட்டு நீராகார வகைகளான காய்கறி சூப் குடிக்கலாம். நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ளல் வேண்டும். உப்பு, கார உணவுகளை தவிர்க்க வேண்டும்.

No comments

Powered by Blogger.