Header Ads



ஆடம்பர வாகன கொள்வனவுக்கு 7 கோடி 60 லட்சம் ரூபா செலவிட்ட மைத்திரி

ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவுக்காக பி.எம்.டபிள்யு. மோட்டார் வாகனமொன்றும், பி.எம்.டபிள்யு. ஆர். 1200 ரக மோட்டார் சைக்கிள் 12 ஐயும் கொள்வனவு செய்வதற்கு ரூபா 7 கோடியே 60 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட முழுத் தொகைக்கு மேலதிகமாக கடந்த மே மாதம் 19ம் திகதி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டே இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் முக்கிய சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் ரூபா 387 கோடி செலவில் பாரியளவில் வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி இவ்வாறு மீண்டும் வாகனம் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது எனவும் அச்சேவை கோடிட்டுக் காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.