Header Ads



உலக செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் (பட்டியல் இணைப்பு)

உலகளவில் செல்வாக்குள்ள இஸ்லாமியர்களில் 2016க்கான‌ 500 நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  

2016க்கான இப்பட்டியலில் முதல் 50 வரிசையில் ஜோர்தான் அரசர் அபுதுல்லா இப்ன் அல் ஹுசைன், சவூதி அரேபியா அரசர் சல்மான் ,அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான்,அமீரக பிரதமர் சேக் முஹம்மது உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

 உலகில் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் என்ற தரப்படுத்தலில் கல்வி,மதம், அரசியல், நிர்வாகம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளை அடிப்படையாக கொண்டு இத்தரப்படுத்தல் இடம்பெற்றுள்ளது.ஜோர்தான் நாட்டின் Royal Islamic Strategic Studies Center இந்தப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் துறைவாரியாக தேர்வு உலகில் முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் கீழக்கரை தைக்கா ஷுஐப் இடம் பெற்றுளளார். கடந்த‌ ஆண்டுகளில்  மறைந்த இந்திய‌ குடியரசு தலைவர் அப்துல் கலாம், மறைந்த தமிழக தொழிலதிபர் கீழக்கரை பி எஸ் அப்துர் ரஹமான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட இம்மூவரும் தமிழகத்தை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

கீழ்வரும் லிங்கினை கிளிக் செய்து முழுவிபரத்தையும் பார்வையிடுங்கள்..!


1 comment:

  1. Do Jordan Abdullah n Abudabi Prince deserve any worth in the list ? Never ever .
    Where r the people of high calibre like Dr .Zakir Naik n Dr.Mohtir Mohamed of Malaysia ? The list needs reappraisal .

    ReplyDelete

Powered by Blogger.