Header Ads



2000 இலட்சம் செலவிடப்பட்ட விவகாரம் - பசில் மீண்டும் சிக்குவாரா..?

ராஜபக்ச அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்சவின் கம்பஹா பிரதான அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தை பணத்திற்கு பெற்றுகொண்டுள்ளதோடு அதன் கட்டுமான பணிகளுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதனை பெற்றுகொள்வதற்கு மற்றும் அலுவலக கட்டிடத்தை நிர்மானிப்பததற்காக 2000 லட்சத்திற்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இது தொடர்பில் எவ்வித கணக்கு அறிக்கைகளும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இப் பணத்தினை யார் வழங்கியது என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் போது பசில் அறக்கட்டளை உறுப்பினரான உபுல் திஸாநாயக்க, நிதி மோசடி விசாரணை பிரிவிடம், மக்கள் வங்கி மற்றும் பீபல்ஸ் லீசிங் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வழக்கறிஞர் டப்ல்யூ. காமினி கருணாஜீவவினால் இப்பணம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதி விசாரணை மேற்கொள்வதற்கு வழக்கறிஞர் டப்ல்யூ. காமினி கருணாஜீவ தற்போது உயிரோடு இல்லை, அவர் 2013ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி மரணித்துள்ளார்.


No comments

Powered by Blogger.