Header Ads



நடுவானில் விமானியின் உயிர் பிரிந்தது - 147 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் (வீடியோ)


அமெரிக்காவில் 147 பயணிகளுடன் பயணித்த விமானத்தின் விமான ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சகவிமானி சாதுர்யமாக கையாண்டு விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் 320 ரக விமானம் நேற்று (05.10.2015), 147 பயணிகள் மற்றும் 5 சிப்பந்திகளுடன் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியான பீனிக்ஸ் நகரில் இருந்து வடகிழக்கு பதியான பாஸ்டன் நகரை நோக்கி புறப்பட்டுச்சென்றது.

இந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, விமான ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனது இருக்கையிலேயே சரிந்த விழுந்தார்.

இதனைப்பார்த்து திடுக்கிட்ட சகவிமானி, செவிலியரின் உதவியுடன் விமான ஓட்டுநரை இடம்மாற்றிவிட்டு, இருக்கையில் அமர்ந்துகொண்டு விமானத்தை மிக சாதுர்யமாக ஓட்டியுள்ளார்.

இருப்பினும் விமான ஓட்டுநருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முற்படுகையில், சில நொடிகளுக்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து அருகாமையில் உள்ள தரை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கிக்கூறிய பின்னர், நியூயோர்க் மாநிலம், ஓனோன்டகா கவுன்ட்டியில் உள்ள சிராகஸ் நகர விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

சுமார் ஐந்து மணிநேர தாமதத்துக்கு பின்னர் அந்த விமானம் பாஸ்டன் நகரை சென்றடைந்தது. மேலும் உயிரிழந்த விமான ஓட்டுநரின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. (வீடியோ) 


No comments

Powered by Blogger.