Header Ads



எனது பாராளுமன்ற சம்பளத்தை, நான் எடுக்கப் போவதில்லை - இஷாக் Mp

(என்.நபீஸ்) 

எனது அரசியல் வாழ்க்கை மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும் .இந்த வாழ்க்கையில் எனக்கு நேரான வழியை காட்டவும் சுவர்க்கம் செல்லவும் பிரார்த்தனை செய்யுங்கள் என அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ .ஆர் .இஷாக் தெரிவித்தார்.

அனுராதபுர மாவட்ட ஹோரவப்பொதான தேர்தல் தொகுதியில்  தமது வெற்றிக்காக உழைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .அவர் மேலும் தெரிவிப்பதாவது ; 

எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி.  நான் மக்களுக்கு சேவை செய்த பின்பே அரசியலுக்கு நுழைந்தேன் .தேர்தலுக்கு முன் நான் என்னென்ன வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினேனோ அவை அனைத்தையும் கூடிய சீக்கிரம் நிறைவேற்றுவேன்.நான் பாராளுமன்றம் செல்வது அங்கு எனக்கு வழங்கும் கதிரையை சூடாக்குவதற்கு அல்ல; பொது மக்களுக்கு என்னென்ன குறைகள் வருகின்றதோ அவைகளை நிறைவு செவதற்கே நான் உங்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டேன் .உங்களுக்கு தேவைகள் வரும் போது தயங்காமல் என்னிடம் கூறுங்கள் நான் உங்களில் ஒருவன்.  

 மேலும் பணம் சம்பாதிப்பது எனது நோக்கமல்ல மக்கள் சேவையை பிரதான நோக்கமாக கொண்டே நான் அரசியலில் குதித்தேன் எனது பாராளுமன்ற சம்பளத்தை கூட நான் எடுக்க போவதில்லை. அதனை எனது மாவட்டத்திலுள்ள சிறுநீரக நோயாளர்கள் ,புற்று நோயாளர்கள் ,முதியோர் மற்றும் அங்கவீனர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளேன் .       
  
எனது வெற்றி அனுராதபுர மாவட்ட அனைத்து இன மக்களுக்கும் உரித்தானதாகும். அதனால் சேவை செய்யும் போது இன மத கட்சி பேதமின்றி சேவை செய்வேன்.எனது வெற்றி செய்தி எனக்கு கிடைத்தவுடன் இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு எனது பொது பணியை ஆரம்பித்து விட்டேன். இதன் முதல் கட்டமாக அனுராதபுர மாவட்டத்திலுள்ள மிக வறுமை நிலையிலுள்ள மூவினத்திலிருந்தும் ஒவ்வொரு குடும்பத்தை தெரிவு செய்து அவர்களுக்கான வீட்டு திட்டமொன்றை ஆரம்பித்துள்ளேன். இம் மூன்று வீடுகளுக்குமான செலவு  தொகையாக  18 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளேன். இதற்கு தகுதியானவர்களை மத இஸ்தானங்களிலிருந்து தெரிவு செய்தேன். என பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.ஆர்.இஷாக் தெரிவித்தார்.         

9 comments:

  1. first of all, it is a great success that you have won non-Muslim votes as well. it is very good to see a Muslim MP from Anuradapura. You should serve all communities equally without any bias. your humanism, kindness and compassion should be exposed to all communities. ACS Hameed win the hearts and minds of lot of Non-Muslim with his politics. I hope that you will have such broad mind to serve SL. not only Muslims alone. I hope that you will have some good advisories to guide you. May Allah guide you and help you. my heartfelt congratulation

    ReplyDelete
  2. இப்படியான அரசியல் வாதிகள்தான் இன்று எமது சமூகத்திற்க தேவையானவர்கள்

    ReplyDelete
  3. இப்படியான அரசியல் வாதிகள்தான் இன்று எமது சமூகத்திற்கு தேவையானவர்கள்

    ReplyDelete
  4. take the salary. be a good MP. do not get too emotional. you need money to spend. people are watching your deeds not words.

    ReplyDelete
  5. "முன்மாதிரி முஸ்லிம்" பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு எமது நல்வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  6. Ithu ondrum thiyahamillai. Arasiyalvathihalukku mp salary aal main income endrirundal niraya per innum cycle il thaan povarhal.
    Work for the people. Sacrificing ur salary is not sacrifice! Work hard for the people that's why they voted for you.

    ReplyDelete
  7. May allah give good health to serve to all community through AL-Haj Ishkag M.P. And accept him service.

    ReplyDelete
  8. Salam. I remind u Mr.ishak mp u first be as a Muslim when u give give the statement to reporters .before read ur statement. When say something remid ur ALLAH that's means inshahAllah (Allah u subanahuthala wills. Anyway ur intention will accept Allah. .mp.Mr.Isshak all the the best serve all the community .Allau Akbar

    ReplyDelete

Powered by Blogger.