Header Ads



அபூபக்கர், உமர், அலி, உஸ்மான் ஆட்சிபோன்று அமையவேண்டும் - மஹிந்த தேசப்பிரிய

-அபு அலா -

தனி நபராலாயோ அல்லது தனி குழுக்களினாலோ ஜனநாயகத்ததை ஏற்படுத்த முடியாது “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பதற்கு அமைவாக அனைவரினதும் ஒத்துழைப்பின் காரணமாகவே இன்று உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்த முடிந்தது. என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் திணைக்களத்தின் 60 வருடப் பூர்த்தியினையிட்டு நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா பத்ர் ஜூம்மா பள்ளிவாசலில் அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திலின விக்ரமரத்ன தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இஸ்லாமிய மத வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தேர்தல் திணைக்களத்தின் 60 வது வருட பூர்த்தியினை தேசிய ரீதியில் கொண்டாடும் வகையில் நான்கு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இந்த நிகழ்வுகள் அநுராதபுரம் மகாபோதியிலும், யாழ்பாணம் மடு தேவாலயத்திலும், திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலையத்திலும், அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை ஹிஜ்றா பத்ர் ஜூம்மா பள்ளிவாசலிலும் ஏற்பாடு செய்துள்ளோம்.

சம்மாந்துறையினை தெரிவு செய்வதற்கான காரணம் இந்த மாவட்டத்தில் கூடுதலான முஸ்லீம்கள் செரிந்து வாழ்வதனாலும் சம்மன்காரர் இங்கு வந்து இறங்கிய இடம் என்பதனாலும், இந்த ஊரிலுள்ள மக்களிடத்தில் ஜனநாயக ரீதியான நிருவாக முறைமை பள்ளி பரிபாலனங்களில் காணப்படுவதனை அறிந்தவன் என்பதனாலும் இந்த இடத்தையும், ஊரையும் தெரிவு செய்து இதனை நாத்த திட்டமிட்டோம்.

சகல மதத்தவர்களும் ஒட்டு மொத்தமாக எதிர்பார்ப்பது ஜனநாயம், இந்த ஜனநாயகத்தை எல்லாம் மதங்களும் வலியுறுத்துகின்றன. இந்த ஜனநாயகத்தைப்பற்றி இஸ்லாம் மதம் குர்ஆன், ஹதீஸ் மூலம் மிக ஆனித்தரமாக வலியுறுத்தி கூறியுள்ளது. அதனை நாம் தற்போது எமது நாட்டில் நிலைநிறுத்தியுள்ளோம் என்பதை எல்லோரும் பெரும் மகிழ்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளோம்.

தொடர்ச்சியாக நாம் ஜனநாயக வழிமுறைகளில் ஒற்றுமையாக அடம்பன் கொடிபோல் செயற்படவேண்டும். நாம் சிங்கள மொழியில் கேட்டாலும், அரபு மொழியில் கேட்டாலும், ஆங்கில மொழியில் கேட்டாலும், தமிழ் மொழியில் கேட்டாலும் கேட்கின்ற விடயம் ஒன்றுதான் அதுதான் ஜனநாயகம் அது பாதுகாக்கப்பட வேண்டும்.

இஸ்லாமிய ஆட்சியின் கலிபாக்களான அபூபக்கர், உமர், உஸ்மான, அலி ஆகியோர்களின் காலங்களில் எவ்வாறு ஜகநாயக ரீதியில் ஆட்சியின் செயற்பாடுகள் அமைந்திருந்ததோ அதேபோன்று அவர்கள் செய்த அந்த ஆட்சியை நாம் மிகத் தெளிவாக விளங்கி இன மத வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழவேண்டும் எ்னறார்.

8 comments:

  1. பாராட்டக்குரியது,இதற்க்கு நம்முடைய ற, றி ,அ, ஹி. இந்த நாலும் ஓன்று சேருமா? மேலே ஒருவர் விளக்கேற்று கிறார் இது எந்த கலிபா ஆட்சியின் வழிமுறை.

    ReplyDelete
  2. Our Muslim Leaders do not know how our Khalifas ruled the Islamic Nation, but they knew how to cheat the Muslim Community.

    ReplyDelete
  3. Excellent statement. You are great role model in this world. Continue your service among your retirement

    ReplyDelete
  4. இவரும் அரசியல் வாதிகளைப் போன்று பெசுகின்றாரே?

    முஸ்லிம் பள்ளிவாசலுக்கு சென்றால், இஸ்லாம் சரி ஏறனு பேசுவது, கோயிலுக்கு சேரனால் முருகனின் நட்பன்பைப் பற்றிப் பேசுவது, இது அரசியல் வாதிகளின் நடிப்பல்லவா?

    இஸ்லாமிய ஆட்சி என்பது தேர்தல் ரீதியான ஜனநாயகம் அல்ல, அது மசூரா ரீதியான கிலாபத்.

    ReplyDelete

  5. அன்று தேர்தல் நடைபெற்று இருந்தால், அலி (ரலி) , உமர் (ரலி) ஆகியோரே அதிக வாக்குகள் பெற்று இருப்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும், ஆனால் இஸ்லாமிய ஆட்சி, அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) உஸ்மான் (ரலி) அலி (ரலி) என்கின்ற ஒழுங்கில் தான் சென்றது, ஆகவே தேர்தலை போட்டு இஸ்லாத்துடன் குழப்ப வேண்டாம்.

    ReplyDelete
  6. அன்று தேர்தல் நடைபெற்று இருந்தால், உஸ்மான் (ரலி) ஆட்சிக்கு வந்திருக்கவே மாட்டார். உஸ்மான் (ரலி) யை விட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்கள் அதிகம் பிற்பல்யமானவராக இருந்தார்.

    உஸ்மான் (ரலி) ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால், முஆவியா (ரலி) கவர்னராக வருவதோ, யசீத் கலீபாவாக வருவதோ நடைபெற்று இருக்காது.

    சிப்பீன் யுத்தம், கர்பலா படுகொலைகள் என்பனவும் இடம்பெற்று இருக்காது. ஷியாக்கள் என்கின்ற பிரிவே தோன்ற வழி ஏற்பட்டு இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. Allah vin eatpadu awwarirunthal yaaraal thadukka mudium ...

      Delete
  7. La Voix is a shiek jew I think.Don't misguide our Sunni Muslims to ur hell path. O.K.

    ReplyDelete

Powered by Blogger.