Header Ads



மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில், பாதுகாப்பாக அடுக்கப்பட்ட நெல்மூட்டைகள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கட்டிய சர்ச்சைக்குரிய பிரம்மாண்டமான மத்தல சர்வதேச விமான நிலையம் தற்போது புதியதொரு வகையில் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. தற்காலிகமாக நெல்லை சேமித்துவைக்கும் நெற்களஞ்சியமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த விமான நிலையத்தில் இருக்கும் சரக்கு கிடங்குகளில் ஒன்றில் நெல்லை சேமித்து வைக்கப்போவதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் மாதத்திற்கு ஆறாயிரம் டாலர் வருமானம் கிடைக்கும் என்று அரசு கூறுகிறது.

இந்த மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மகிந்த ராஜபக்ஷவின் சொந்த மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெகு விமரிசையாக துவக்கி வைக்கப்பட்டது.

ஆனால் வனவிலங்குகள் அதிகம் வசிக்கும் சூழலில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டிருப்பதனால் இங்கு வரும் விமானங்களுக்கும் பறவைகளுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பவதும் அதனால் உருவாகவிருந்த விபத்துக்கள் தவிர்க்கப்படுவதும் மிகப்பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்தது.

ஃபிளை துபாய் என்கிற ஒரே ஒரு விமான நிறுவனம் மட்டுமே இந்த விமான நிலையத்தைத் தற்போது பயன்படுத்துகிறது.

இங்குள்ள சரக்கு கிடங்கில் சேமிப்பதற்காக புதன்கிழமை கொண்டுவரப்பட்ட முதல் தொகுதி நெல் மூட்டைகளை ஏற்றிவந்த வாகனங்களை மறிப்பதற்கு விமான நிலைய ஊழியர்கள் சிலர் முயன்றனர். அனால் அவர்களால் அதை தடுக்க முடியவில்லை.

எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றிய காவல்துறையினர் நெல்மூட்டைகளை கிடங்கில் கொண்டு சென்று சேமிக்கச் செய்தனர்.


2 comments:

  1. இதன் கண்ணாடி கட்டிடங்களும் , அழகான சுற்றுச் சூழலும் , அமைவிடமும் - நெற்களஞ்சிய சாலை அமைப்பதை விட IT சென்டர் அல்லது பயிற்சி கல்லூரி போன்றவற்றுக்கு பொருத்தமாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.