Header Ads



மகிந்த - மைத்திரி மேடையில் அமர்ந்திருக்க, மகிந்தவின் தவறை சுட்டிக்காட்டிய பேராசிரியர்...!


போரை முடிவுக்கு கொண்டு வந்து முக்கிய பணியை செய்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மகிந்த ராஜபக்ச, தனது பதவிக்காலத்தை நீடித்து கொண்டு கட்சிக்கு பாரதூரமான சேதத்தை ஏற்படுத்தியதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் இதனை கூறும் போது, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் ஒரே மேடையில் அருகில் அமர்ந்திருந்தனர்.

எஸ்.டப்ளியூ. ஆர். டி. பண்டாரநாயக்க முதல் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேன வரை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களின் காலத்தில் கட்சிக்கு ஏற்பட்ட நன்மைகள் குறித்து பேராசிரியர் பேசினார்.

கதுருவெல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் சம்மேளனத்தில் சிறப்புரையாற்றுவதற்காக பேராசிரியர் விஜேசூரிய அழைக்கப்பட்டிருந்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு பின்னர், கட்சியின் தலைமை பொறுப்பு மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்தது. அவரது தலைமையில் நாட்டின் அபிவிருத்திக்காக எடுக்கப்பட்ட சாதகமான பணிகளை மறந்து விட முடியாது. நீண்டகால போரை முடிவுக்கு கொண்டு வந்ததை நாங்கள் கௌரவமான முறையில் நினைவுகூருகிறோம். இந்த கௌரவம் அவருக்கு நாட்டு மக்களிடம் இருந்து கிடைக்கும்.

அதேபோல் சிறிமாவோ பண்டாரநாயக்க தனது பதவிக்காலத்தை இரண்டு வருடங்களால் அதிகரித்து போல, மகிந்த ராஜபக்சவும் பாரதூரமான தவறை செய்தார். இந்த தவறினால், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்ட தலைவிதி மிகவும் சோகமானது எனவும் பேராசிரியர் விஜேசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.