Header Ads



'ப்ரகீத்தை சுறாக்களுக்கு இறையாக்க முடியாது' - ஞானசாரருக்கு பதிலடி

செய்தியாளராக ப்ரகீத் எக்னெலிகொட விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டமை தவறு அல்லவென பிரஜைகள் சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

அவ்வாறு குற்றம் சுமத்தி ப்ரகீத் எக்னெலிகொடவை இராணுவம் கொலை செய்வதற்கு உரிமையில்லை என அமைப்பின் இணை அழைப்பாளர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார்;.

2010 ஆம் ஆண்டு ப்ரகீத் எக்னெலிகொட காணாமல் போக செய்யப்பட்டமை தொடர்பில் இராணுவ புலனாய்வாளர்கள் மூவர் அண்மையில் விசாரணை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், விடுதலைப்புலிகளின் ஒற்றராக எக்னெலிகொட செயற்பட்டதாக குறிப்பிட்டார்.

இந்த கருத்து குறித்து இன்று ஊடகங்களுக்கு தமது நிலைப்பாட்டை விளக்கிய சமன் ரத்னப்ரிய, தேதுன்ன என்ற விடுதலைப்புலிகளின் செய்தி தாளுக்;கு ப்ரகீத் எக்னெலிகொடவே வசதிகளை செய்து கொடுத்தார் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுவது அவருடைய நிலைப்பாடு மாத்திரமே என குறிப்பிட்டார்.

இந்த நிலைப்பாட்டை சமூகம் ஏற்றுக் கொள்ள போவதில்லை.

புலனாய்வு செய்தியாளர் என்ற அடிப்படையில் எக்னெலிகொட விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தமை தவறு இல்லை.

போர் இடம் பெற்று கொண்டிருக்கும் இடத்தில் புலனாய்வு செய்தியாளர் ஒருவர் அனைத்து தரப்புக்களுடனும் தொடர்புகளை கொண்டிருப்பார்.

இதில் ப்ரகீத் தவறு ஏதும் இழைந்திருந்தால் அது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும்.

அதைவிடுத்து, ப்ரகீத்தை சுறாக்களுக்கு இறையாக்க முடியாது.

கொலை செய்ய முடியாது.

அந்த அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்படவில்லை என சமன் ரத்னப்ரிய குறிப்பிட்டார்.

2 comments:

  1. ப்றேகீத் அவர்களின் கொலையை இந்த கொலைகாரன் ஞானசார நியாயப்படுத்த வருகிறான் புலனாய்வுத்துறை இலங்கையில் நடந்த கொலைகளை எல்லாம் தீர விசாரித்தால் இந்த ஞானசாராக்களின் பங்களிப்பும் கலந்து இருக்க வைப்பு ஏற்ப்படும்.

    ReplyDelete
  2. மகிந்தைக்கு அல்லாஹ் வழங்கிய மருந்து ஞானசாரணுக்கும் கூடிய விரைவில் இன்சா அல்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.