Header Ads



என்னால் தவறுகள் இடம்பெற்றிருந்தால், மன்னித்துக் கொள்ளுங்கள் - தயாசிரி

வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் மாகாண விவசாய அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா ஆகியோருக்கான பிரியாவிடை நிகழ்வு  குருனாகலில் அமைந்துள்ள வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வடமேல் மாகாண சபையில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் அங்கம் வகித்த இவர்கள் இருவரும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவானதையடுத்தே இவ்விருவருக்கும் இவ்வாறு பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், தினைக்களத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் தயாசிரி ஜயசேகர ஆற்றிய சேவையினை கௌரவிக்கும் வகையில் குருனாகல் நகர சபை உறுப்பினர் ஒருவரினால் அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் இந்த வைபவத்தின் போது வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது தான் மாகாணத்தின் முதலமைச்சராக 640 தினங்கள் கடமையாற்றியுள்ளதாகவும், மாகாண முதலமைச்சர் பதவியை விட்டுவிட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருக்கவே செல்வதாகவும், கடந்த வடமேல் மாகாண சபைத் தேர்தலில் சந்திரிக்கா பண்டார நாயக்காவைவிட அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றே தான் மாகாண முதலமைச்சராக வந்தாகவும், தான் பாடசாலைகளுக்குச் சென்றும், பன்சலைகளுக்குச் சென்றும் அரசியல் பேசவிலலை என்றும், தொடர்ந்தும் தெளிவான நிலைப்பாட்டிலட இருந்து கோண்டே அரசியல் செய்யப் போவதாகவும் குறிப்பிட்ட அவர், தான் முதலமைச்சராகக்  கடமையாற்றிய காலப்பகுதியில் தனக்கு உருதுணைாயகச் செயற்பட்ட அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், என்னால் ஏதுமு் தவறுகள் இடம்பெற்றிருப்பின் மன்னித்துக் கொள்ளுமாறும் இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா உட்பட ஏழு மாகாண சபை உறுப்பினர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.