Header Ads



தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின், வேலைத் திட்டங்கள்.

2015ஆம் ஆண்டுக்கான உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நாடு முழுவதும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் கொழும்பு மாவட்டத்தில் 6 பிரதான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய வீடபை;பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்தார்.

குறித்த இந்த பிரதான வேலைத்திட்டங்களுக்கமைய கொழும்பு நகரிலும் அதேபோன்று ஏனைய பிரதான நகரங்களை சூளவுள்ள பிரதேசங்களிலும் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 3 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன்  கொழும்பில் உள்ள 18,000 குடும்பங்களிற்கு அவர்கள் தற்போது வசிக்கும் 2 பேர்ச் காணிக்கான  உறுதிப்பத்திரமும் வழங்கப்படவுள்ளது.

அதேபோன்று குறைந்த வாடகை செலுத்தும் 1756 குடும்பங்களிற்கு காணியின் உறுதிப்பத்திரம் வழங்கப்படுவதுடன் 20,000 குடும்பங்கள் தற்போது வசிக்கும் காணிகளினது குத்தகை உரிமையும் வழங்கப்படவுள்ளது, அதேபோன்று 1000 மில்லியன் ரூபா செலவில் கொழும்பில் அமைந்துள்ள 26 மாடி வீட்டுத்திட்டங்கள் புனரமைக்கப்டவுள்ளதுடன் நகர அபிவிருத்திகாக கடந்த காலப்பகுதிகளில் அப்புறப்படுத்துவதற்காக தீர்மானிக்கப்பட்டிருந்த 20,000 குடும்பங்களது வீடுகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும்; தெரித்தார்.

இதேபோன்று தேசிய வீடமைப்பபு அபிவருத்தி அதிகார சபையால் கடந்த ஆண்டுகளிலும் உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நாடுபூரகவும் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது குறிப்pடத்தக்கது

எம.ஏ.பாஹிம்
உதவி ஊடக முகாமையாளர்

1 comment:

Powered by Blogger.