Header Ads



கவ்பாவை இப்படி தவாப் செய்யலாமா..? (படம் இணைப்பு)

புனித கஃபாவை யாத்திரிகர் ஒரு வர் மின்சார சக்கர பாதணி கொண்டு வலம்வரும் (தவாப்) வீடியோ ஒன்று சமூகதளங்களில் பிரபலம டைந்ததை அடுத்து இந்த நடை முறை குறித்த மார்க்கத் தீர்ப்பொன்றை கோரி அழுத்தம் அதிகரித்துள்ளது.

உம்றாஹ் வழிபாட்டில் ஈடுபடும் யாத்திரிகர் ஒருவர் க/பாவை ஏழு முறை நடந்து வலம்வரும் தவாப் வழிபாட்டை மின்சார சக்கர பாதணி கொண்டு மேற்கொள்ளும் சிறிது நேரம் ஓடும் வீடியோவே சமூகதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இந்த விவகாரம் குறித்து சமூகதள பயன்பாட்டாளர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு தானாக நகரும் கருவி ஒன்றை தவாப் வழிபாட்டில் பயன்படுத்தி இருப்பது குறித்து அதிர்ச்சி வெளியிட்டிருக்கு பலர், உடலால் முடியுமாக இருந்தால் அவர் நடந்தே அந்த வழிபாட்டை செய்திருக்க வேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதேபோன்று உடலால் முடியாத நிலையில் சக்கர நாற்காலி கொண்டு அந்த வழிபாட்டை செய்திருக்க வேண்டும் என்று பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்த விவகாரம் குறித்து உடன் தீர்வு காணப்பட வேண்டும் என்று சவூதி நாட்டு வலைப்பூ பதிவாளர் ஒருவர் குறிப் பிட்டுள்ளார்.

 "தொடர்ந்து அமைதி காத்துக் கொண்டிருந்தால் அது உம்றாஹ் அல்லது யாத்திரைகளில் ஆன் மிக நடைமுறையில் இல்லாத பல புதிய கண்டுபிடிப்புகளும் தோன்றக் காரணமாகிவிடும்" என்று அவர் குறி ப்பிட்டுள்ளார். இவ்வாறான சக்கர பாதணிகள் எதிர்காலத்தில் கஃபாவில் ஒரு நடைமுறையாக போய்விடும் அபாயம் இருப்பதாக மற்றுமொருவர் விமர்சித்துள்ளார்.

எனவே இவ்வாறான சக்கர பாதணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தியுள்ளனர்.


4 comments:

  1. Iyandhira ulagam
    Should be banned

    ReplyDelete
  2. y not - sahaba use to do thawaf in camel

    ReplyDelete
  3. இன்னும் கொஞ்ச காலத்தின் பின் ஒன்லைன் மூலமும் ஹஜ் செய்யும் முறையும் வரலாம். எல்லாம் பத்வா தானே.

    ReplyDelete

Powered by Blogger.