Header Ads



தேசிய அடையாள அட்டையில், இனிமேல் 12 இலக்கங்கள் - V குறியீட்டையும் நீக்க தீர்மானம்

2016 ஜனவரி மாதம் முதல் வெளியிடப்படும் தேசிய அடையாள அட்டைகளின் தொடர் இலக்கங்களை பதிவு செய்யும் போது 9 இலக்கங்களுக்கு பதிலாக 12 இலக்கங்களை பதிவு செய்வதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

அத்துடன் அடையாள அட்டையின் தொடர் இலக்கங்களின் இறுதியில் பதியப்படும் V குறியீட்டையும் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

அடுத்த வருடம் முதல் வெளியிடப்படும் தேசிய அடையாள அட்டையின் பதிவு இலக்கங்களை 12 இலக்கங்களாக்கும் போது, அடையாள அட்டை உரிமையாளரின் பிறந்த வருடத்தை முழுமையாக உட்படுத்தலாம். தற்போது பதிவு இலக்கங்களின் ஆரம்பத்தில் இடப்பட்டிருப்பது அடையாள அட்டை உரிமையாளரின் பிறந்த வருடத்தின் இறுதி இரண்டு இலக்கங்களாகும்.

தற்போது தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொண்டுள்ளவர்கள் பதிவு இலக்கங்களை மாற்றிக் கொள்ள அவசியம் இல்லை என்றாலும் அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ளும் போது பழைய இலக்கங்களை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்றார்.

1972 ஆம் ஆண்டு தேசிய அடையாள அட்டை வெளியிடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் பதிவு இலக்க எண்ணிக்கை 9 ஆக பதிவு செய்யப்பட்டதுடன் 44 வருடங்களுக்கு பிறகே அதில் மாற்றம் ஏற்படப்போகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.