Header Ads



UNP கோ, SLFP கோ தனியாக அரசமைக்கும் ஆணையை மக்கள் வழங்கவில்லை - துமிந்த

நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகள் தொடர்பான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நியூஸ்டுடே சிங்கள இணையத்தளம் இந்தச் செய்தியை பிரசுரித்துள்ளது.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள துமிந்த திசாநாயக்க,

ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது சுதந்திரக் கட்சிக்கோ தனியாக அரசமைக்கும் ஆணையை பொதுமக்கள் வழங்கவில்லை. தேர்தல் முடிவுகளை கவனித்தால் இது தெளிவாக தெரிய வரும்.

ஜனாதிபதித் தேர்தலின் போது பொதுவேட்பாளராக ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன முன்வைத்த நல்லாட்சிக் கொள்கை நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனை முன்கொண்டு செல்லும் வகையிலேயே நாடாளுமன்றத் தேர்தலின்போது பொதுமக்கள் வாக்களித்துள்ளனர்.

அதனை நாங்கள் கருத்திற்கொண்டு, நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே தேசிய அரசாங்கத்தில் அமைச்சப் பதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளளோம் என்றும் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.