Header Ads



"மக்கள் எமக்கு இம்­முறை, சந்­த­ர்ப்பம் வழங்­கினால்..." மஹிந்த

கடந்த ஜன­வரி மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலின் போது மக்கள் ஜனா­தி­ப­தியை மாற்­றவே வாக்­க­ளித்­தனர். ஆனால் ஜனா­தி­ப­தி­யுடன் சேர்ந்து அர­சாங்­கமும் மாற்­றப்பட்டு மக்கள் ஏமாற்ப்­பட்­டு­விட்­ட­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

மேலும் அரச சேவைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படும் நாட்டின் சமஷ்டி வாத கோரிக்கைள் முற்றாக நிராகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காலி எல்­பிட்­டிய பிர­தே­சத்தில்  நடை­பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

கடந்த 100 நாள் அர­சாங்கம் தேர்தல் பிர­சார மேடை­களில் மக்கள் தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக 100 திட்­டத்தை முன்­வைத்­தி­ருந்த போதும் ஆட்சி அதி­காரம் கிடைத்­தன பின்­னர்­அ­தனை மறந்­து­விட்டு பழி­வாங்கும் பட­லத்தை தொடங்­கி­யது.

அதன் பின்னர் விவ­சா­யிகள் மற்றும் பெருந்­தோட்ட துறை­யினர்,சிறு­தே­யிலை தோட்ட உரி­மை­யா­ளர்­க­ளுக்கும் தேயி­லை­க்கான நிர்­ணய விலை அதி­க­ரிக்­கப்­ப­டும்­ என வழங்கிய வாக்­கு­று­தி­க­ளையும் ஐக்­கிய தேசிய கட்சி மறந்து விட்­டது. இறப்பர் நெல் உற்­பத்­தி­யா­ளர்­களும் ஐக்­கிய தேசி­ய­கட்சி ஆட்­சியில் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர்.

ஆனால் ஐக்­கிய தேசிய கட்சி மக்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய ஏமாற்­ற­த்தையளித்தது. அதனால் நாட்டு மக்­கள்­ அ­னை­வரும் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர்.கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின்போது நாட்டின் ஜனா­தி­ப­தியை மாற்ற வேண்டும் என்­ப­தற்­கா­கவே மக்கள் வாக்களித்தனர். ஆனால் ஜனா­தி­ப­தி­யுடன் சேர்ந்து அர­சாங்­கத்­தையும் மாற்­றி­விட்­டனர். அதனால் தான் அது மாற்றம் அல்ல மக்­க­ளுக்கு கிடைத்த ஏமாற்றம் என்று கூறுகின்றோம்.

இதனால் இந்த அர­சாங்­கத்தை மாற்ற மக்கள் முன்­வர வேண்டும். மக்கள் எமக்கு இம்­முறை சந்­த­ர்ப்பம் வழங்­கினால் தேயி­லை­யிக்­கான விலை 90 ரூபா­வா­கவும் பாலின் விலை 70 ரூபாவாகவும் ,நெல்லின் விலை 50 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்படும். அரச சேவைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படும் நாட்டின் சமஷ்டி வாத கோரிக்கைள் முற்றாக நிராகறிக்கப்படும் என்றார்

4 comments:

  1. நீங்கள் சும்மா கத்திக் கத்தி எந்தப் பயனும் இல்லை. தேயிலை, பால், நெல் ஆகியவற்றின் விலையை நாம் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக்கிட்டு இரண்டும் கெட்டான் நிலையில் ஒதுங்க வேண்டியது தான்.

    ReplyDelete
  2. If opportunity given again your first duty is to be revenge our muslim leaders & entire muslim community.
    We are very keen in this concern.

    சந்தர்ப்பம் வழங்கினால் முதல் நீங்கள் செய்வது முஸ்லிம்களையும் சமூகத்தின் உரிமைக் குரழாக என்றுமே ஓங்கியொழித்துக் கொண்றிருக்கும் றிஷாத் பதியுதீன் போன்ற இஸலாமிய தலைவர்களையும் பழிவாங்குவதையே
    ஆதலால் குருநாகல் மாவட்டத்தின் துடிப்புள்ள இளைய சமூகமாகிய நாம் உங்களின் பசப்பு வார்த்தைகளுக்கு ஏமாறத் தயாரில்லை

    ReplyDelete
  3. Even you give every thing free, you will not be able to win.

    ReplyDelete

Powered by Blogger.