Header Ads



கம்பஹா, புத்தளம், களுத்துறை, குருநாகல், அநுராதபுரம், கொழும்பு முஸ்லிம்களின் கவனத்திற்கு..!

-நஜீப் பின் கபூர்-


தெற்கு பகுதியில் முஸ்லிம்களுக்கு நம்பகத் தகுந்த அரசியல் தலைமைகள் இல்லாத காரணத்தால் ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கின்ற வேட்பாளர்களுக்கே முஸ்லிம்கள்  தமது வாக்குகளைப் பதிய வேண்டிய நிலை. 


ஒரு இலட்சத்து 175000 முஸ்லிம் வாக்குகள் கொழும்பில் இருந்தும்  கடந்த தேர்தலில் முஸ்லிம்கள் அங்கு கோட்டை விட்டிருந்தார்கள்.

புத்தளத்தில் இருக்கின்ற வாக்குத் தொகைக்கு மிக இலகுவாக ஒரு வேட்பாளரைக் கரை சேர்க்க முடியுமாக இருந்தாலும் இரு தசாப்தங்களக அங்கு முஸ்லிம்கள் ஏமாளிகளாக இருக்கின்றார்கள். இந்த முறை நபவிக்கு நல்தொரு வாய்புக் காணப்படுகின்றது.

களுத்துறையில் இம்டியாசுக்குப் பின்னர் கவர்ச்சிகரமான தலைமைகள் அமைய வில்லை. ரணிலுக்குப் பிடிக்காது என்பதால் அவர் இன்று ஓரம்கட்டப் பட்டுள்ளார் அல்லது அதற்கான பின்னணி அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குருனாகல் மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பிரதிநித்துவத்துக்கு தேவையான வாக்குகள் போதியளவு இருந்தும் அலவிக்குப்பின் அது சாத்தியப்படாமல் இருந்து வருகின்றது. இந்த முறை டாக்டர் சாபி நல்ல வேட்பாளராக இருந்தாலும் அவரது பிரச்சார உத்திகள் மிகவும் பலயீனமாக இருந்து வருகின்றது. எனவே வாய்ப்பை அவர் நலுவிடுவார் என்பது எமது கனிப்பு. என்றாலும் கடினமாக உழைத்து தனது பலயீனங்களைக் இனம் கண்டு வைத்தியம் பார்த்தால் சாபிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது.

கடந்த தேர்தலில் ஐ.தே.க.வில் கடைசியாக வெற்றி பெற்ற விஜேசிங்ஹ எடுத்திருக்கும் விருப்பு வாக்கு 30687 மட்டுமே. குருனாகல் மாவட்டத்தில் 90000 முஸ்லிம் வாக்குகள் இருக்கின்றது.

கம்பஹ முஸ்லிம்கள் தமது வாக்குப் பலத்தை சரியாக உபயோகித்தால் அங்கும் சாதிக்கலாம்.

அனுராதபுறத்தில் கூட முஸ்லிம்கள் தமக்கு ஒரு உறுப்பினரை வென்றெடுக்க முடியும். வேட்பாளர் இஷாக் நம்பிக்கையுடன் இருந்தாலும் அவர் இன்னும் வெற்றி இலக்கை அடைய நிறையவே காரியங்கள் பார்க்க வேண்டி இருக்கின்றது. கடந்த தேர்தலில் ஐ.தேக.வில் ஹெரிசன் 24884 வாக்குகளையும்  ஐ.ம.சு.முன்னணி சார்பில் வீரகுமார திசாநாயக்க 27102 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றார்கள் அனுராதபுரத்தில் 51936 முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் வாக்கு வங்கியை முஸ்லிம்கள் பல இடங்களில் வைத்துக் கொண்டும் தோல்வியைத் தழுவப் பிரதான காரணம் தமக்குத் தாமே குழிபறித்துக் கொள்வதும் பழைய சம்பிரதாய முறைகளிலேயே இன்னும் தமது பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்வதும் பிரதான காரணங்கள் என்பது எமதுபார்வை.

No comments

Powered by Blogger.