Header Ads



ஜனாதிபதி மைத்திரிக்கு, மஹிந்த ராஜபக்ச வழங்கிய "இரகசிய வாக்குறுதி"

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு,  மஹிந்த ராஜபக்ச இரகசியமாக வழங்கிய வாக்குறுதி உண்மை என சிங்கள இணையத்தளம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்சவின் கௌரவமான பிரியாவிடைக்காக ஜனாதிபதியிடம் சந்தர்ப்பம் ஒன்று கோரப்பட்டுள்ளதாகவும், ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் கலந்துரையாடலின் முடிவாகவே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக குறித்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் மொஹமட் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ க்வான் யூ என்பவர்களுக்கு வழங்கப்பட்ட சிரேஷ்ட பிரதமர் பதவியினை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், அதற்கு ஜனாதிபதியிடம் இருந்து சிறப்பானதொரு பதில் கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

பொது தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் செயற்பாடுகளுக்கு இடமளித்து ஓய்வு பெறுவதாகவும் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதிக்கு வாக்குறுதியளித்ததாக இதற்கு முன்னர் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சந்திக்கவுள்ள தோல்வியின் பொறுப்பினை ஜனாதிபதி மீது சுமத்தி மஹிந்த ராஜபக்சவை தொடர்ந்து அரசியலில் செயற்படுவதற்கான முயற்சி தொடர்பில் தகவல் வெளியாகியதனை தொடர்ந்தே இக்கோரிக்கை மற்றும் வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்ற சுதந்திர கட்சியின் ஐவரை கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு கட்சி மாநாடொன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரப்பட்டது இதன் ஊடாக ஜனாதிபதியினை கடினமான நிலைக்கு உட்படுத்த முயற்சித்தனர்.

ஜனாதிபதி இவ்யோசனையினை எதிர்ப்பார் என மஹிந்த தரப்பினர் எதிர்பார்த்தனர், ஜனாதிபதி கட்சி தலைவர் அதிகாரத்தை பயனபடுத்தி குறித்த ஐவரின் உறுப்புரிமையை ரத்து செய்தமையினால் மஹிந்த தரப்பினரின் திட்டம் தோல்வியடைந்தன.

மைத்திரி தரப்பினருக்கு எதிராக தேர்தல் நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளும் மஹிந்த தரப்பினருக்கு தோல்வியை மாத்திரம் கொண்டு வந்தது.

இந்நிலையினை அறிந்துக்கொண்டதன் பின்னர் மஹிந்த ராஜபக்ச கௌரவமாக ஓய்வு பெறுவதற்கான சந்தர்ப்பம் கோருவதற்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என குறித்த இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

2 comments:

  1. புலி பதுங்குவது பலி எடுக்கத்தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  2. மஹிந்தை சொல்வதை கேட்டு நடப்பதற்கு அந்தளவுக்கு மைத்திரி மடையனாக இருக்க மாட்டார்.

    ReplyDelete

Powered by Blogger.