Header Ads



மஹிந்த ராஜபக்சவுக்கு கௌரவமான பிரியாவிடையா..? மைத்திரி பச்சை கொடி காட்டுவாரா..??

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் கௌரவமான முறையில் அரசியலில் இருந்து வெளியேற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.

இதனடிப்படையில் கௌரவமான பிரியாவிடைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சந்தர்ப்பம் ஒன்று கோரப்பட்டுள்ளதாக ராஜபக்ச குடும்ப தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கோரிக்கை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னணியில் ஒரு ஆசனத்தை அல்லது அதிகபட்டசமாக நாடாளுமன்றில் பிரதமர் பதவியை சில காலங்களுக்கு மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்குமாறும், சில மாதங்களில் தனது பதவியில் இருந்து கௌரவமாக விலகிக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்வார். எனினும் இக்காலப்பகுதியினுள் ஜனாதிபதியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென கோத்தபாய உறுதியளித்துள்ளார்.

எனினும் இந்த யோசனை ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்படாத போதிலும், அதற்கான யோசனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மஹிந்த ராஜபக்ச மூத்த மாநிலத் தலைவர் (Senior State Leader) என பெயரிடப்பட வேண்டும். அதில் அமைச்சரவை அமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் அடிப்படை பாதுகாப்பு முறைகள் (Preliminary Protection) வழங்கப்படுவதோடு இராஜதந்திர நடவடிக்கைகளின் போது அவருக்கு அரச தலைவர் மற்றும் சமமான அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

உலகில் அத்தகைய ஆட்சியாளர்களை இருவர் மாத்திரமே உள்ளனர் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் மொஹமட் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ க்வான் யூ என்பவர்களுக்கு மாத்திரமே அவ்வாறான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஒரு போது பிரதமர் பதவி வழங்கப்பட மாட்டாதென ஜனாதிபதி  தெரிவித்திருந்தார். இதன் காரணத்தினாலே ராஜபக்ச குடும்பத்தில் பலரின் யோசனைக்கு அமைய மஹிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்குமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

அவ்வாறான நிலைமையினுள் மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி கிடைக்காமைக்கான சந்தர்ப்பங்களே அதிகம் காணப்படுகின்றன.

அவரது ஆளுமைக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கைக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனூடாக மஹிந்த ராஜபக்ச யுத்தக் குற்ற குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள நேரிடக்கூடும் என்பதனால் இந்த யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் பதவி தொடர்பில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை இந்த யோசனைகள் இரண்டிற்கு இடையில் ஊசலாடிக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் இவ்வார இறுதியினுள் மீண்டும் மக்களுக்கு ஜனாதிபதி உரையாற்ற இருந்த போதும்,அதனை தாமதமாக வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

4 comments:

  1. This is a trap to assassinate MY3. If it happens, that will be the end of SL. People must get into the road to stop this conspiracy.

    ReplyDelete
  2. அது நல்லாட்சி செய்த லீ குவன் யூ, மஹாதீர் போன்றவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும், நரித்தனத்தனமும், நயவஞ்சக குணமும் கொண்ட நாட்டையே சூறையாடி குடும்ப ஆட்சி செய்த இவனுக்கு எங்கனம் பொருந்தும். எப்படியோ உள் நுழைந்து அவனது அடிவருடிகளுடன் சேர்ந்து ஆட்டம் போட பாசாங்கு செய்கிறான் . இதைத்தான் "எப்படியாவது மகிந்தவை பிரதமராக்குவோம்" என்று மேடைக்கு மேடை கூவித் திரிகிறார்கள் போலும்? தற்போதைய ஜனாதிபதி மிகவும் உஷாராக, புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். பாம்பு நலிவடைந்து விட்டாலும் பல்லில் விஷம் இருக்கும்

    ReplyDelete
  3. ஆழம் அறியாது காலை விடாதே. இத்தனை அராஜகங்களையும் செய்து விட்டு இவர்களுக்கு மரியாதையே இல்லாமல் பிச்சை கேட்கின்றனரே. இவனுக்கு எதற்கு கௌரவம்? இவருக்கு பிரதமர் பதவி கொடுத்தால் இவர் ஒருபோதும் விலகுவதுமில்லை. அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் இந்நாட்டை அழிவில் தள்ளாமல் இப்போதே அவரின் தலையைத் தடாவி ஓரமாக்கிவிடவேண்டியது தான்.

    ReplyDelete
  4. இப்படி கெஞ்சி கிராவி உள்ள பூந்துட்டு மைத்திரிக்கு ஆப்படிக்கதான்.இந்த பாடுபர்றது.

    ReplyDelete

Powered by Blogger.