Header Ads



"ஐக்கிய தேசிய கட்சி, நயவஞ்சகம் செய்துவிட்டது"

ஆசாத் சாலிக்கு தேசியப் பட்டியலில் இடம்தருவதாக சொல்லிவிட்டு பின்னர் ஏமாற்றப்பட்டுள்ளதாக ஆசாத் சாலிக்கு நெருக்கமான வட்டாரங்கள் jaffna muslim இணையத்திற்கு தெரிவித்தன.

இதுதொடர்பில் அந்த வட்டாரங்கள் மேலும் சொல்லியபோது:

மகிந்தவை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்திற்கு ஆசாத் சாலி பெரிதும் பங்காற்றியிருந்தார்.  இதை ரணிலோ அல்லது மைத்திரியோ மறந்திருக்கமாட்டார்கள். ஆசாத் சாலி கண்டியில் போட்டியிட தயாரானபோது அது தடுக்கப்பட்டது: ஆசாத் சாலிக்கு தேசியப் பட்டியல் தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது. இதனால் அவர் சுயேற்சையாக போட்டியிடுவதிலிருந்தும் தவிர்ந்துகொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக உழைத்தார். இறுதியில் ஏமாற்றப்பட்டார்.

நேற்று வியாழக்கிழமை பிந்நேரம் வரை ஆசாத் சாலியின் பெயர் தேசியப் பட்டியலில் இருந்துள்ளது. பின்னர் இறுதி நேரத்தில்தான் அவரது பெயர் நீக்கப்பட்டது. இதன்மூலம் ஆசாத் சாலிக்கு நயவஞ்சகத்தை ஐக்கிய தேசியக் கட்சி செய்துவிட்டதெனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன:

14 comments:

  1. இந்த செய்தி உண்மையென்றால், பதவிகளுக்கு ஆசைப்படாமல் எப்படி சேவை செய்வது என்று அசாத் சாலி இம்தியாஸ் பாகிர்மாக்காரிடம் போய் கற்கவேண்டியிருக்கும்.
    ஐ.தே,கட்சிக்கு 13 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்தது. அதில் 3 ஆசனங்களை முஸ்லீம்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். நான்காவதாக அசாத் சாலிக்கு இன்னுமொரு ஆசனம் கேட்பது எனக்கு நியாயம் என்று தோன்றவில்லை.
    அசாத் சாலியுடன் இன்னும் பல சிங்களவர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கும் கிடைக்கவில்லை ஏனெனில் 13 பேருக்குதான் கொடுக்கமுடியும். இதனை புரிந்துகொள்ளும் பக்குவம் நம்மவர்களுக்கு வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அசாத்சாலிக்கு தேசிய பட்டியல் தருவதாக கூறி, அவர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதும் தடுக்கப்பட்டு தேசியபட்டியல் தருவதாக உறுதியளிக்கப்பட்டதும், பின்னர் ஐ.தே.க வின் நாடு தழுவிய பிரச்சாரத்தில் பங்கு கொள்ளச் செய்யப்பட்டதும் பின்னர் தற்போது தேசியப்பட்டியல் இல்லை என்று சொல்வதும் உங்களுக்கு அநியாயமாக தெரியவில்லை.. ஆனால் நான்காவதாக முஸ்லிம் ஒருவருக்கு ஆசனம் கொடுப்பதும், கேட்பதும் தான் உங்களுக்கு அநியாயமாக படுகிறது.. உங்கள் தொலைநோக்கு பார்வை மேலும் வளர வாழ்த்துக்கள்....

      Delete
  2. அந்த மூன்று ஆசனங்களும்,
    பங்காளி கட்சிகளுக்கு வழங்கியவை,

    ReplyDelete
  3. So why the UNP give national list to Daya Gamage's wife?

    ReplyDelete
  4. ஆசாத் சாலி பொறுமையாக இருந்து செயல்பட்டால் நிச்சயமாக எதிர்காலத்திலும் நிகழ்காலத்திலும் முஸ்லிம் மக்களுக்கு பெரும் சேவை செய்ய முடியும்.சேவை செய்ய பட்டம் தேவை இல்லை பொறுமை இருந்தால் போதும்.அல்லாஹ் அதைவிடப்பெரும் பட்டங்களை நிச்சயமாக தருவான்.முஸ்லிம் அரசியல்வாதிகளைபோருத்த வரையில் ஆசாத்சாலி ஒரு முக்கியமான புள்ளி என்பதை யாரும் மறுக்க முடியாது.முஸ்லிம்களுக்காக மரணத்தின் கதவை தட்டிவிட்டு வந்தவர்தான் ஆசாத்சாலி.மஹிந்தையை கள்ளன் கள்ளன் என்று சொன்ன தைரியசாளிகளில் இவரும் ஒருவர்,ரஞ்சன் ராமநாயக,,ஹிருநிகா புத்திக்க பத்திரன ,மரிக்கார் போன்றோர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

    ReplyDelete
  5. imthiyas baker marikkar his very good politician.he knows he dont have a parliament chance.but he supported to party campaign until end

    ReplyDelete
  6. Allah Akbar Muslim galai BBS ikku kati kodutha ivrum nanum Vida munfik thanm 2 vardam Kandy I'll vetri Petri inum orgaluk pohavilai kndi.muslimgaluku nala padam 3 must.member vara iruntha Ivar poo that muslim

    ReplyDelete
  7. Imtiyas Bakeer does need he made his money with the help of Kamardeen and telecom scandal
    and bought a huge mansion in Colombo 07

    ReplyDelete
  8. அரசியலோ, அரசியல் பற்றிய அறிவோ அற்ற இவர் எந்த விதமான ஒரு கொள்கையும் அற்றவர். முதலில் ஐ. தே . க , பின்பு மகிந்த அணிக்கு மாரி, பின்பு முஸ்லிம் காங்கிரசுக்கு மாரி, கடைசியில் ஐ . தே. க இற்கே வந்து சேர்த்தார். ரணிலுக்கு இவரின் மரம் விட்டு மரம் பாயும் குணம் தெரிந்தோ என்னவோ தேசிய பட்டியலில் இடம் கொடுக்க வில்லை. முதலில் இவர் செய்ய வேண்டியது நாவை அடகிகொள்ள வோண்டும், இரண்டாவது ஒரு கொள்கை அரசியல் செய்ய வேண்டும். இவர் ஒன்றும் முஸ்லிம்களுக்கு குரல் கொடுபதாக நினைத்து கொள்ள வேண்டாம். அண்மையில் இபகமுவையில் (குருநாகலை) முஸ்லிம்கள் பள்ளிக்கு போகும் பொது தக்கப்பட்டனர். ஒரு முஸ்லிம் அரசியல் வதியும் வாய் திறக்க வில்லை. எல்லோரும் சுயநலவாதிகள் மற்றும் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க "முஸ்லிம்" மற்றும் "இஸ்லாத்தை" பயன்படுத்துகிறார்கள்.

    ReplyDelete
  9. ok coming Local election we will support to Asad Sali

    ReplyDelete
  10. UNP cheated not only azad saly they cheated )Kandy) Muslims too. 4 Muslims could elect in Kandy unp brought down that to two. Muslims most of them voted for laxman kiriyella and vel kumar.

    ReplyDelete
  11. ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம்களுக்கு துரோகம் செய்ய ஆரம்பம் செய்து விட்டது.ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றதே முஸ்லிம் .தமிழ் மக்களின் வாக்குப்பலத்தினால் .ஆனால் தேசியப்பட்டிய மூலம் முஸ்லிம் தமிழ் வேட்பாளர்களுக்கு இடம் மறுக்க ப்பட்டது இக்கட்சிக்கு
    வாக்களித்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.இது திட்டமிட்டது தானா?இக்கட்சியின் வெற்றிக்கு இரவு பகல் பாராமல் உழைத்த அசாத் சாலி .மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி பெரிய அளவில் ஆப்பு வைத்து விட்டது .இது முஸ்லிம் மக்களுக்கு புதிய பிரதமர் கொடுக்கும் முதலாவது பரிசு.பொறுத்து இருந்து பார்ப்போம் இந்த அரசாங்கம் எங்கபோய் முடியும் என்று.

    ReplyDelete
  12. It is sheer political treachery.

    ReplyDelete
  13. கண்டியில் அசாத் சாலி போட்டியிட்டிருந்தால் ஹகீம் ஹலீம் பெற்ற வாக்குகள் மூன்றாக பிரிந்து சென்றிருக்கும். அப்பொழுது 3வரில் ஒருவர்தான் பாராளுமன்றம் போய் இருப்பர். அதுவும் ஒரு இலட்சம் விருப்புவாக்குகளை யாரும் பெற்றிருக்க மாட்டார்கள்.
    தேசிய பட்டியலில் அசாத் சாலிக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் சோபித ஆமதுருவுக்கும் கொடுத்திருக்கவேண்டும். ஏனெனில் மகிந்தவை பதவி இறக்குவதில் அசாத் சாலியைவிடவும் அதிகம் பங்குவகித்தவர் சோபித தேரர்.
    மற்றது அசாத் சாலி ஒரு தனி கட்சியை சாா்ந்தவர். அவர் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறியவர். அவர் தனி கட்சியாக தேர்தலில் குதித்திருந்தால் நாடு பூராவும் சுமார் 50,000 வாக்குகள் தான் பெற்றிருக்கும் அந்த கட்சி. அதற்கு ஒரு ஆசனம் கேட்பது மடைமையாகும்.
    இம்தியாஸ் பாகிர் மாக்கார் - தனக்கு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்காது என்று தெரிந்துகொண்டுதான் மும்முறமாக தனது கட்சிக்காக உழைத்தார். கொழும்பு 07 இல் பங்களாவுக்காக அவர் அப்படிச் செய்தார் என்று யாரும் சொல்வார்களானால் பாகிர் மாக்காரின் சொத்துக்கள் பற்றி தெரியாதவராகதான் இருக்கவேண்டும்.
    புதிய பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் பிரதிநிதிகள் என்ன செய்யபோகிறார்கள் என்று பார்த்து அவர்களை உட்சாகப்படுத்தி முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதே காலத்தின் தேவையாகவுள்ளது.
    2020ம் ஆண்டு அசாத் சாலியையும் இம்தியாஸ் பாகிர் மாக்காரையும் பாராளுமன்றம் அனுப்புவோம் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.