Header Ads



சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை..?

-Dr. N. Ariff-

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலே கரையோரப் பிரதேசங்களிலே முக்கியமான பழமை வாய்ந்த ஊர்களிலே சாய்ந்தமருதும் பிரதானமானது. இயற்கையாகவே மருதம், நெய்தல் எனும் நிரப்பரப்பினைக் கொண்ட சாய்ந்தமருது ஆங்கிலேயர் காலத்திலேயே தனியாக 47 தொடக்கம்  53 வரை அடையாளமிடப்பட்டிருந்ததுடன், 1928 ம் ஆண்டில் 10 வட்டாரங்களை உள்ளடக்கிய தனியான கரைவாகு தெற்கு  கிராமிய சபையாக சுயநிருவாக கட்டமைப்பாக இருந்து வந்தது.

எனினும், 1987 ம் ஆண்டில் நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேச சபைகள் சட்டத்தின் பின்னர், அது கல்முனைப் பட்டின சபையோடு இணைக்கப்பட்டு, கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது. இந்த செயலானது ஒரு சிலரின் சுயலாபம் கருதியே செய்யப்பட்டது என்பதை மிக விரைவிலேயே உணரத் தொடங்கியதன் காரணமாக, சாய்ந்தமருதுக்கு தனியான உள்ள10ராட்சி சபை வேண்டுமென்ற கோரிக்கையானது 1988 ம் ஆண்டிலிருந்தே முன்வைக்கப்பட்டு விட்டது.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ள10ராட்சி சபைக் கோரிக்கை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நிருவாகம், சமூக ஆர்வலர்கள், பல சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் என்ற பல தரப்பட்ட அமைப்பினராலும் 1988 ம் ஆண்டிலிருந்து அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வந்ததாயினும், அண்மைக்காலமாகவே அந்தக் கோரிக்கை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. அதற்கு இந்தப் பிராந்தியத்தில் நிலவுகின்ற அரசியல் கொந்தளிப்பும் ஒரு முக்கிய காரணமாகும்.

உள்ள10ராட்சி சபைகள் மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டனவே அன்றி மக்களின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியவாறாக அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுதல் வேண்டும். 

2001. 02. 04 ம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் எல்லைகள் 2006. 10. 13 ம் திகதிய இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் வடக்கு எல்லையாக சாஹிறா தேசிய பாடசாலை வீதியும், தெற்கு எல்லையாக மாளிகைக்காடு வீதியும், கிழக்கு எல்லையாக கடலும், மேற்கு எல்லையாக வெட்டுவான் ஆறும் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சாய்ந்தமருதுக்கான தனியான உள்ள10ராட்சி சபை அமைக்கப்படும் போது எல்லைப் பிரச்சினை எழுவதற்கான எந்தவிதமான நியாயமான காரணமும் இருக்க முடியாது. 

வளப்பற்றாக்குறையுடன் காணப்படுகின்ற கல்முனை மாநகர சபையானது ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சனத் தொகையை பரிபாலிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கையில், அதிலிருந்து சாய்ந்தமருது பிரிந்து ஒரு தனியான உள்ள10ராட்சி  அமையப்பெறும் போது, அது சகல மக்களுக்கும் நன்மையானதாகவே அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அவ்வாறு மாற்றுக்கருத்து முன்வைக்கப்படுமாக இருந்தால், அது சிலரின் தனிப்பட்ட வசதி, வாய்ப்புக்களைத் தக்க வைப்பதற்காகவே தவிர பொதுவான கருத்தாக அமையாது.

நியாயமான இந்தக் கோரிக்கையானது அண்மைக்காலம் வரை, அரசியல்வாதிகளினதும், தனி நபர்களினதும் சொந்த நலனுக்காக நகர்த்தப்பட்டதன் காரணமாகவே இன்னும் அது நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. எனினும், அண்மைக்காலமாக சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரின் தலைமையில் பல சமூக சேவை அமைப்புக்கள் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டதன் காரணமாக இம்முறை நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலின் போது இந்த விடயம் முக்கியமானதொரு பேசுபொருளாகப் பார்க்கப்பட்டது.

சாய்ந்தமருது நலன்புரி மன்றம் என்ற அமைப்பானது நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்னர், அமைச்சர்களான கரு ஜயச10ரிய மற்றும் றவுப் ஹக்கீம் அவர்களையும் சந்தித்து இது சம்பந்தமான முக்கியமான கலந்துரையாடலையும் மேற்கொண்டிருந்தனர். அத்தோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கும் கடிதம் மூலமாக வேண்டுகோள் விடுத்து, ஜனாதிபதியும் அது சம்பந்தமாக கவனம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பல அரசியல் கட்சித் தலைவர்களும் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ள10ராட்சி சபையைப் பெற்றுத் தருவோம் என்று கூறிய அதேவேளை, கல்முனையில் மாபெரும் தேர்தல் பிரச்சார மேடையில் வைத்து பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களும் பகிரங்கமாகவே வாக்குறுதி அளித்திருப்பது சாய்ந்தமருது மக்களிடையே பெருத்த நம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்பதுடன், எதிர்வரும் உள்ள10ராட்சி சபைத்தேர்தலுக்கு முன்னர் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ள10ராட்சி சபை வழங்கப்படும் என்ற அதீத எதிர்பார்ப்படன் காத்திருக்கிறார்கள்.

எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர் இம்முறை எவ்வகையிலேனும் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ள10ராட்சி சபையைப் பெற்றுக்கொடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

1 comment:

  1. Poruththar arasalvar. Ponginavar kaddukku selvar. Porumaiyaga irunthu, nithanamaha naharavum. Athil Kalmunai municipal council um nammidamirunthu parikkappadakkoodathu.

    ReplyDelete

Powered by Blogger.