Header Ads



எதிர்க்கட்சித் தலைவர் பதவி, எனக்கு வழங்கப்படுமென எதிர்பார்க்கின்றேன் - தயாசிறி

எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கினால் ஏற்றுக்கொள்வேன் என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று இது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது அமைச்சு பதவிகள் வேண்டாம், எதிர்க்கட்சியில் இருக்கவே விரும்புகின்றேன் என கூறியிருந்தேன். எனவே எதிர்க்கட்சியின் முக்கிய பதவியொன்றை வகிக்க நான் விரும்புகின்றேன்.

ஒன்பதரை ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் இருந்தமையினால் எனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க தகுதியுண்டு என கருதுகின்றேன். எனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கின்றேன். நான்கு ஆண்டுகள் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராகவும் கடமையாற்றியிருக்கின்றேன்.

பேச்சாற்றல், சட்ட அறிவு, அனுபவம், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் பற்றிய அறிவு, நடவடிக்கைகள் போன்ற பல்வேறு தகமைகள் எனக்கு உண்டு. புதிய அரசாங்கத்தை தேசிய அரசாங்கமாக கருதவில்லை, ஒட்டுமொத்த அரசாங்கத்தை விமர்சனம் செய்ய வேண்டியதில்லை. தனித்தனியாக விமர்சனங்களை நிதானமாக செய்ய முடியும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. At first you try to get a ministry post you couldn't get it now you are trying to get the opposition leader post.

    ReplyDelete
  2. He is suitable for opposition leader, he has 9 years experience in Parliament & one years provincial council,he can become a smart leader in srilanka

    ReplyDelete

Powered by Blogger.