Header Ads



மகிந்தவின் சகோதரர் மைத்திரியை மதித்து, தேசிய அரசாங்கத்தில் இணைகிறார்

மகிந்த ராஜபக்ஸவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஸ ஜனாதிபதி மைத்திரியை மதித்து தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிக்கு தாம் கட்டுப்படுவதாகவும், அந்தவகையில் சுதந்திர ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பது என்ற திர்மானத்தை மேற்கொண்டிருப்பதால் தாமும் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு 2 தெரிவுகள் இருப்பதாகவும் ஒன்று கட்சியிலிருந்து வெளியேற வேண்டும். இல்லையேல் தேசிய அரசாங்கத்துடன் இணைய வேண்டும். எனினும் தாம் இரண்டாவது தீர்மானத்தையே மேற்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. மகிந்தவின் விஷேச தூதுவராக தேசிய அரசாங்கத்தில் சேருவார் அதுதான் உண்மை.போங்கடா பைத்திய காரக்கூட்டம்.நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.அடுத்து மகிதட மகனுக்கு பிரதி அமைச்சர் பதவி கிடைக்கும்.பச்ச துரோகிகள்.

    ReplyDelete
  2. சபாநாயகர் பதவிலிருந்து ஓய்வெடுப்பதாக மக்களை ஏமாற்றி பதவி ஆசையில் தேர்தலில் போட்டியிட்டு வாய்ப்புக்கள் அனைத்தும் இழந்ததை உணரந்த பின்தான் மைத்திரி மேல் நம்பிக்கை வந்துள்ளது. அதிகாரத்தில் இருக்கும் நல்லவர்கள் இவர் போன்ற நயவஞ்சகர்களை மிகவும் அவதானத்துடன் அனுகுவது நல்லாட்சிக்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  3. எல்லாம் "ரனில்" என்கிற "அதி மேதாவியின்" மண்டையில் இருந்து நிரம்பி வழியும் புதிய போக்கு சிந்தனை! ஐ.தே.க. யை வெல்ல வைப்பதற்காக சாதாரன கட்சி தொண்டா்கள் செய்த தியாகம், கஷ்டம் எல்லாம் வெண்டாலும் தோற்றாலும் எப்போதும் சொகுசு வாழ்க்கை வாழும் இவருக்கு எங்கே புரியப் போகுது!

    ReplyDelete

Powered by Blogger.