Header Ads



எதிர்க்கட்சித் தலைவர் பதவி, ஒரு தமிழருக்கு வழங்கப்பட வேண்டும் - டிலான் பெரேரா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா, கொழும்பு ஊடகமொன்றுக்கு நேர் காணல் வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகித்தால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.அவ்வாறு வழங்கப்படாவிட்டால், தமிழர் ஒருவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படக் கூடாது என அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Good but in srilanka for Tamil (speaking people) can not be a President, prime minister. Or opposition leader. It's mean sinhala hard liners will not accept.

    ReplyDelete
  2. 21 ஆம் நூற்றாண்டில் இப்படி ஒரு பிள்ளையா

    ReplyDelete
  3. இப்படியான அறிக்கைகளை விட்டாவது மீடியா attention ஐ எதிர்பார்க்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.