Header Ads



''ஜப்னா முஸ்லிம் இணையத்தின், வளர்ச்சியில் வாசகர்கள்''

ஜப்னா முஸ்லிம் இணையத்தின் வளர்ச்சியில் மிகப்பிரதான பங்களிப்புச் செய்தவர்கள் அதன் வாசகர்கள். இதில் ஆரோக்கியமான விமர்சனங்களை குறிப்பிட்டுக் கூறலாம். 

ஜப்னா முஸ்லிம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் செய்திகள், கட்டுரைகள் நேர்காணல்கள் என்பவற்றுக்கு வாசகர்கள் தரப்பிலிருந்து பதியப்படும் பின்னூட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் சிந்திக்கத் தூண்டுபவையாகவும், நாட்டிற்கும், சமூகத்திற்கும் மிகுந்த பயனுள்ளதாகவும் அமைந்திருக்கும். 

ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வரும் பின்னூட்டங்களை பிரபல்யமிக்க அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், உலமாக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் வாசிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதை ஜப்னா முஸ்லிம் இணைய நிர்வாகம் நன்கு அறிந்து வைத்துள்ளது. 

அவ்வாறு வாசகர்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திலும், ஜப்னா முஸ்லிம் பேஸ்புக்கிலும் தெரிவிக்கும் மிகச்சிறந்த பின்னூட்டங்களை (வாசகர் பக்கத்தில் தனியொரு அங்கமாக பிரசுரிக்க தீர்மானித்துள்ளோம்.

அதேவேளை மிகவும் தாழ்மையாக நாம் வாசகர்களிடம் வேண்டுவது யாதெனில்..!

தயவுசெய்து விடயத்திற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை பதியாதீர்கள். அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய விவகாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையம் பதிவிடும்போது, அந்த அரசியல்வாதியை உங்களுக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது ஏதோவொரு காரணத்திற்காக பிடிக்கவில்லையாயின் அந்த அரசியல்வாதியின் பேஸ்புக்கில், ஈமெயிலில், வீட்டு விலாசத்தில் அல்லது தொலைபேசி இலக்கத்திற்கு உங்கள் ஆத்திரங்களை கொட்டித் தீருங்கள். 

எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிகள், உள்ளிட்ட எவரையும் தூற்றும் அல்லது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் ஒரு சாதனமாக ஜப்னா முஸ்லிம் இணையத்தை பாவிக்காதீர்கள்.

எதிர்வரும் நாட்களில் நாகரீகமற்ற பின்னூட்டங்கள், மற்றும் அரசியல்வாதிகளுக்கும், ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மூட்டிவிடும் வேலை பார்க்கும் நபர்கள் அனுப்பும் பின்னூட்டங்களுக்கும் இடமளிக்கப்படாது என்பதை உறுதியுடன் கூறவிரும்புகிறோம்.

www.jaffnamuslim.com


இன்றைய சிறந்த பின்னூட்டம் 29-08-2015

http://www.jaffnamuslim.com/2015/08/blog-post_375.html








1 comment:

  1. முஸ்லிம் சமூகத்துக்கு ஜப்னா முஸ்லிம் மிகவும் மகத்தான சேவையும் சமூக விழிப்புணர்வையும் செய்து வருகிறது. மிகவும் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். சில நேரம் பின்னூட்டல்கள் மிகவும் காலதாமதாய் பிரசுரிக்கப்படுகிறது. உடனுக்குடன் பின்னூட்டல் பதியப்ப்படுமாயின் மிகவும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.