Header Ads



நரம்புகளை முறுக்கேற்றி வாக்குகேட்கும், கலாசாரம் என்னிடம் இல்லை - றிசாத் பதியுதீன்

தேர்தல் காலங்களில் மட்டும் மக்களின் உணர்வுகளை உசுப்பேற்றி அவர்களின் நரம்புகளை முறுக்கேற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வங்குரோத்து அரசியல் கலாசாரம் தன்னிட மில்லையென அமைச்சரும் வன்னி மாவட்ட வேட்பாளருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது மேலும் கூறியதாவது,

நான் என்றுமே மக்கள் பணியாளனாகவே இருந்து வருகின்றேன். அரசியலுக்காக மட்டும் மக்களிடம் வருவதில்லை.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. இம் மாவட்டத்தில் 3 ஆசனங்களை நாம் பெற்றுக்கொள்வோம். வன்னி மாவட்டத்தில் அரசியலில் பெரும் மாற்றங்களை நாம் காணப் போகின்றோம். கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் எதனை இந்த மக்களுக்கு சாதித்துக் காட்டியுள்ளார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

யுத்த அழிவுகளால் அத்தனையினையும் இழந்த மக்களுக்கு தேவையானது அவர்களது வாழ்வாதாரமாகும், அதற்கு மாற்றமாக தேர்தல் காலங்களில் மட்டும் வீராப்பு பேசுகின்றனர்.

இந்த நிலையில் இருந்து மக்கள் தற்போது விடுபட ஆரம்பித்துவிட்டனர், இன்று எம்முடன் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இணைந்து வருகின்றதை பார்க்கின்ற போது சந்தோஷம் அடைகின்றோம். மக்களுக்கு கிடைக்காத அபிவிருத்தியில் எவ்வித பலனுமில்லை என்பதை எல்லோரும் இன்று அறிந்து கொண்டனர்.

வடக்கிலும், கிழக்கிலும் எமது கட்சி அதிகப்படியான ஆசனங்களை பெற்று ஆட்சியின் முக்கிய பங்காளியாக மாறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சி மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றது. இந்த மாவட்டத்திற்கு மயில் சின்னம் புதிதாக இருந்தாலும், மக்கள் ஆதரவு அதற்கு பெருகிவருகின்றது. இதனை கண்டு பலர் அச்சமடைந்துள்ளனர் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறினார்.

6 comments:

  1. You can take UTurn any government within any lenghth of time as it happened in presidential election such exceptional talent you have.
    Go ahead sir, you are such a real model for inspirational leaders we got in this decade same as AHM Ashraff.

    ReplyDelete
  2. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

    உண்மையிலேயே வன்னி மண்ணில் முஸ்லிம் மக்களிடம் வாக்குக் கேட்க ரிசாத் தவிர்ந்த ஏனையோர் வெட்கப்பட வேண்டும். இதுவரை அகதிகளுக்காக ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடாதவர்கள், அம்மக்களின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பாதவர்கள், அம்மக்களைக் காட்டிக் கொடுத்துத் தம் சட்டைப் பைகளை நிரப்பிக் கொண்டவர்கள் மற்றும் புதிதாய் முளைத்துள்ள கள்ளக் கடத்தல்காரர்கள்- கொள்ளைக்காரர்கள் எல்லாம் தம்மைச் சுய விமர்சனம் செய்து கொண்டு, அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவதோடு ரிசாதுக்குத் தமது ஆதரவை வழங்க வேண்டும்.

    25 வருடங்கள் அகதி வாழ்க்கை வாழும் மக்கள் வாழ்வில் இப்பொழுதுதான் கொஞ்சமேனும் மறுமலர்ச்சி ஏற்படத் தொடங்கியுள்ளது. இது அல்லாஹ்வின் கிருபையாலும் ரிசாத் பதியுதீனின் அயராத முயற்சியினாலுமே என்பதுதான் உண்மை. அந்த மக்கள் தாங்கள் இன்னும் அனுபவிக்கும் துன்பங்களை இனி வரும் ஒருவர் ஆரம்பத்திலிருந்து கற்றுக் கொண்டு புதிதாகத் தொடங்கத் தேவையில்லை. தான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து அம்மக்களுக்கான சேவைகளை ரிசாத் செய்து முடிப்பார். எனவே அவரை வெல்ல வைப்பது, மாற்று அணியில் போட்டியிடும் ஒவ்வொரு இஸ்லாமியனதும் கடமை.

    இந்த விடயத்தில் முரண் பட்டு, ரிசாத் மேல் கொண்ட அழுக்காறு-பொறாமை-வஞ்சகம் என்பவற்றின் காரணமாகக் கருத்துரைக்க முனைவோர் முதலில் அல்லாஹ்வைப் பயந்து கொண்டு, அப்புறமாக மாற்றுக் கருத்துக்களை முன் வையுங்கள்.

    வஸ்ஸலாம்.

    ReplyDelete
  3. ரிசாத் அவர்களே, நரம்பு, உணர்ச்சி, சமூகம் போன்ற விடயங்கள் உங்களுக்கு இல்லை என்பது முஸ்லிம் மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதை நீங்களும் ஒத்துக்கொண்டது நல்ல விடயம். அகதிகள் முகாமில் இருந்து வாழ்கையை ஆரம்பித்த நீங்கள், ஆடும் ஆட்டம் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கும், அரசியல் பலத்துக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது. உங்களது இந்த ஆட்டம் பிரபாகரன், ராஜபக்ச போன்றோர் ஆடிய ஆட்டத்தை விட அதிகமாகவே உள்ளது. இதற்க்கு சரியான பதிலடியை முஸ்லிம் மக்கள் கொடுப்பார்கள், கொடுக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். உங்களது இந்த ஆட்டம் முஸ்லிம் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எங்களது கணிப்பு. உங்களின் ஆதரவு இருந்தால் ராஜபக்சவால் ஆட்சி அமைக்க முடியும் என்ற ஒரு நிலைமை வந்தால் கட்டாயமாக நீங்கள் ராஜபக்சவுக்கு உங்களது ஆதரவை கொடுப்பீர்கள் என்பது எங்களது கணிப்பு. நீங்கள் போடும் இந்த ஆட்டத்துக்கு நிட்சயமாக விசாரணை உண்டு. பணத்தால் நீங்கள் போடும் இந்த ஆட்டத்துக்கு நிட்சயம் விசாரணை இருக்கு. ராஜபக்ச அன் கோ களின் ஊழல் விசாரிக்கப்படும் போது நீங்களும் விசாரிக்கப்படுவீர்கள் என்பது எங்களுது கணிப்பு.


    முஸ்லிம் மக்களே, புத்தி ஜீவிகளே, பல்கலைகழக மாணவர்களே, சமூகப்பற்றுள்ள இளைஞர்களே..! ஒரு தனி நபரை நம்பி நமது ஒற்றுமையையும் அரசியல் பலத்தையும் இழக்க முடியாது. மக்களுக்கு தெளிவு படுத்துங்கள். குறை நிறை பேசும் தரணமல்ல இது என்பது எமது பணிவான கருத்தாகும்.

    ReplyDelete
  4. உங்களின் உண்மையான பெயரையிடாமல் குருவியென்று உங்களை நீங்களே அடையாளப்படுத்த முயற்சிப்பதன் மூலம் வஞ்சகத்தனமான உங்கள் முகத்தின் மறுபக்கத்தை காட்டவேண்டாம்
    குருவி போல் துடிப்பான சிறகுகளிருந்தால் றிஷாத் பதியுதீனைப் போல முஸ்லிம்கள் எத்திக்கில் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து தன்னாலியன்ற உதவிகளை செய்பவர்
    தலைவருக்கெதிராக கொமண்டிட நீங்கள் இரவு பகலாக கீபோர்ட எழுத்துக்களைத்தேடி காலத்தை நாசமாக்க வேண்டாம்
    றிஷாட் பதியுதீனையறிய வன்னிப்பக்கம் வந்து பாருங்கள்
    கிணற்றுத்தவளையாக இருந்துகொண்டு மீடியாக்களுக்கு கொமண்டிட்டு வன்னி மாவட்ட மக்களின் இரத்தத்தை சூடாக்க வேண்டாம் உங்களுக்களுக்கான ஒட்சிஸன் உள்ளயிடத்தில் மாத்திரம் சிறகடித்துப் பாருங்கள் இல்லாவிட்டால் டூப்லிகேட் சிறகும் உடைந்து விடும்

    ReplyDelete
  5. குருவியாரே அகதி முகாமில் உள்ளவன் எப்பாதேும் அகதியாகவே முடங்கிக் கிடக்க வேண்டுமென்ற பிரபுத்துவ எண்ணமுள்ளவரா நீர்
    அவலை நினதை்து உரலை இடிப்பது போல் ஒட்டு மொத்த வட மாகாண அகதி மக்களயைும் கேவலப்படுத்துகிறீர்
    வடமாகாண அகதிப் பெண் ஓருவர் அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியால் உலகின் பத்து வீரப்பெண்களில் ஒருவராக கௌரவிக்கப்பட்ட வரலாறும் உள்ளது
    கட்சியை வளர்ப்போம் என்று வெற்றுப் பேச்சுக்களால் மக்களை ஏமாற்றுபவரகளுக்கு மத்தியில் வாக்களித்த மக்களுக்காக சேவை புரியும் முஸ்லிம் அரசியல்வாதிகளில் இன்று முதலிடத்தில் இருக்கும் அமைச்சர் ரிஷாட் ஐ உங்களைப் போன்ற பிரபுக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதுதான்
    தலைவர் அஷ்ரபிற்கு பிறகு அரசிலே இருந்து கொண்டே இனவாதம் பேசுபவர்களை ஓரளவிற்கேனும் எதிர்த்தவர் ரிஷாட் மட்டும் தான் என்பதை உங்களாலும் மறுக்க முடியாது என்பதே உண்மை

    ReplyDelete

Powered by Blogger.