Header Ads



சமூகத்திற்கு ஆயுட்கால விலங்கிட, வெற்றிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் திட்டம் - றிசாத்

-மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா-

எவர்கள் இந்த மாவட்டத்தில் இனவாதம் பேசி மக்களை பிளவுபடுத்தவிரும்பகின்றாரோ,அவர்களுக்கெதிராக நாம் அச்சமின்றி குரல் கொடுப்போம் என வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியில் யாணைச் சின்னத்தில் போட்டியிடும் முதலாம் இலக்க வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கூறினார்.

மன்னார் உப்புக்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேதற்கண்டவாறு கூறினார்.

இன்று சிலருக்கு இந்த உப்புக்குளத்தின் மீது அக்கறை ஏற்பட்டுள்ளது.உப்புக்குளம் மக்களுக்கு பிரச்சினை என்று வருகின்ற போது அதனை துடைக்க வராதவர்கள்,இன்று இங்கு வந்து சிலருக்கு பணம் கொடுத்து அரசியலை செய்கின்றனர்.அந்தப் பணத்துக்கு சோரம் போய் எமது மக்களை காட்டிக் கொடுக்கும் இப்படிப்பட்டவர்கள் தொடர்பில் நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்த நாட்டு முஸ்லிம்களையும்,தமிழர்களையும் அச்சப்படுத்தும் வேலையினை செய்த மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்ய சிலர் முயற்சிக்கின்றனர்.இவர்களது தோன் மட்டும் பொருளாதார ரீதியில் நன்மையடைந்தால் போதும்,இந்த சமூகம் எக்கேடு கெட்டாலும் போதும் என்று சிந்திக்கின்ற ஒரு கூட்டம் இனறு இந்த பிரதேசத்திற்கு வந்து ஒரு சில ஆயிரங்களை கொடுத்து அலுவலகம் திறந்துள்ளனர்.

எமது மக்களின் தேவைகள் நிறைய இருக்கின்ற போது,அது தொடர்பில் இவிவளவு காலமாக எதனையும் செய்யாத இந்த நபர்கள்,இன்று இம்மக்கள் தொடர்பில் கண்ணீர் வடிக்கின்றனர்.இவர்களின் பின்னால் சென்று இந்த மக்களுக்கு கிடைக்கவிருக்கின்ற நன்மைகளை இல்லாமல் ஆக்கிவிடாதீர்கள்,நீங்கள் இவ்வாறு செயற்படுவதானது இம்மக்களுக்கும் இம்மாவட்டத்துக்கும் செய்யும் துரோகத்தனமாகும்.

உப்புக்குளம் என்பது மன்னாரின் தலைவாயிலாகும்,இங்கு வசிக்கும் இளைஞர்கள் வீரமுள்ளவர்கள்,அவர்கள் ஒரு போதும்,அஞ்சுக்கும்,கோடிக்கும் விலை போகாதவர்கள்,அவர்கள் வீரமுள்ளவர்கள்,கோழைகளல்ல,சமூகத்திற்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி தம்மையே தியாகம் துணிவு கொண்டவர்கள் என்பதை தான் பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

சிறுபான்மை சமூகத்தின் ஒட்டு மொத்த அரசியல் உரிமையினை விலை கொடுத்து வாங்கி,அவர்களுக்கு ஆயுட்கால விலங்கிட வெற்றிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் திட்டங்களை தீட்டிவருகின்றனர்.தன்மானம் உள்ள சமூகத்தை உயிர் மூச்சாக சுவாசிக்கும் எந்தவொரு நபரும் வெற்றிலைக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றும் அமைச்சரும்,வேட்பாளருமான றிசாத் பதியுதீன் கூறினார்.

No comments

Powered by Blogger.