Header Ads



"ஒருவரை ஒருவர், பழிவாங்கும் சந்தர்ப்பம்"


பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து முஸ்லிம் அரசியல் கட்சிகள், பிரமுகர்களின் ஆவேசமான பேச்சுக்கள், கட்சி தாவல்கள் என கூர்ந்து அவதானிக்கும் போது ஒரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய தரப்பு தவிர ஏனையோர் முஸ்லிம் சமூகத்தை அடகு வைக்கும் அரசியல் நாடகமொன்றை அரங்கேற்றி வருவது கவலை அளிக்கிறது.

தேசிய முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் (SLMC , ACMC , NC):
* ஒருவரை ஒருவர் பழி வாங்கும் சந்தர்பமாக பயன்படுத்துகின்றனர்
கட்சித்தாவல்கள்:
* தமக்கு வாய்ப்பளிக்கவில்லை என்ற காரணம் மட்டுமே தவிர சமூக நலன் பற்றிய அக்கறை எங்கும் தெரியவில்லை
சமூக வலைத் தல செயல்பாட்டாளர்கள்:
* ஆங்காங்கே ரகசியமாக நடாத்தப்படும் கூட்டங்களை அனுமதியின்றி பதிவுசெய்து பகிரங்கமாக அவற்றை பிரசுரிக்கும் மிகவும் கீழ்த்தரமான செயலை செய்து வருகின்றனர்.

எல்லாவற்றுக்கும் அப்பால் முஸ்லிம் சமூகத்தின் சமூக, மார்க்க தலைமைகள் "நல்லாட்சி" என்ற சொற்றொடருக்கு அப்பால் சென்று நேரடியாக வழிகாட்ட முடியாத கையாலாகத்தனத்துடன் இருப்பது பற்றி யாரிடம் தான் முறையிடுவதோ???

அபூ சைத்

1 comment:

  1. மாற்று சகோதரனைப் பற்றிய குறைகளை துருவித் துருவி ஆராய்ந்து பொதுமக்கள் முன்னிலையில் வசைபாடுவதன் மூலம் நீங்கள் ஒன்றும் மகா சீலர்களாகி விடப்போவதில்லை
    பேரினவாதிகள் முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதறடிக்க முனாபிக்குகளின் உதவியோடு சந்து பொந்துகளிலெல்லாம் கண்ணம் வைத்து தருணம் பார்த்து காத்திருக்கிரார்கள்
    எங்களது ஒற்றுமையை சீர்குைலைப்பதே பேரினவாதிகளின் ஆயுதம்
    வசைபாடுவதும் குறைகூறித் திறிவதும் உங்களது கோழைத்தனமே
    இதனைத் தவிர்த்து உங்கள் அறிவாலும் செல்வத்தாலும் சமூகத்துக்காக
    நீங்கள் செய்ததையும் செய்யப் போவதையும் பொது மக்களிடமம் முன்வைத்துப் பணியாற்றுங்கள் வரலாறு நெடுகிலும் உங்கள் பெயர் மீண்டும் மீண்டும் ஒளித்துக் கொண்டேயிருக்கும்
    இல்லாவிட்டால் உங்களது வாரிசுகளுக்கும் அது சாபமே

    ReplyDelete

Powered by Blogger.