Header Ads



உண்மையான பௌத்தர்கள் பொது பலசேனாவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் - லக்ஸ்மன் கிரியல்ல

பொதுபல சேனா அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிடுவது நல்ல ஒரு தீர்மானம் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.

நேற்று உடுநுவர பிரதேசத்தில் மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,

பொதுபல சேனா அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிடுவது நல்ல ஒரு தீர்மானம் இம்முறை  அவர்களுக்கு விளங்கும் அவர்களுக்குள்ள  மக்கள் செல்வாக்கு எவ்வளவு என்று.உண்மையான பவுத்தர்கள் அவர்களை முற்றாக புறக்கணிப்பார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எமது தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஞான சார தேரர் விமர்சித்திருந்தார்.ஐக்கிய தேசிய  கட்சி அனைத்து இனத்தவர்களையும் சமமாக பாதுகாக்கும் கட்சி இந்த தேரர்களின் விமர்சனங்களை கண்டு எமது கட்சியினது அடிப்படை கொள்கைகளை மாற்ற முடியாது.

பவுத்த மதம் மற்ற மதங்களை கவுரவிக்கும் படி  போதிக்கிறது   இம்முறை தேர்தலில் போட்டியிடும் பொதுபல சேனாவுக்கு உண்மையான் பவுத்தர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என சுட்டிக்காட்டிய அவர் தான் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் இரண்டாயிரத்து பதின்மூன்றாம் வருடம் தைரியமாக குரல்கொடுத்தை நினைவுகூர்ந்த அதேவேளை அது முஸ்லிம்களின் வாக்குகளை எதிர்பார்த்து அல்ல என்பதையும் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.