Header Ads



கோத்தபாயவுக்கு பொலிஸ் அதிகாரி, சல்யூட் அடித்த விவகாரம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் செல்யூட் செய்து மரியாதை செய்தமை ஏற்றுக்கொள்ளத்தக்க செயலல்ல என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் கோத்தபாய கடந்த திங்கட்கிமையன்று 24ஆம் திகதியன்று சாட்சியமளிக்க சென்றிருந்தார்.

இதன்போது அவருக்கு பொலிஸ் அதிகாரி வணக்கம் செலுத்தியதாக கொழும்பின் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த பிரசன்னத்தின் போது கோத்தபாய 5 மணித்தியாலங்களாக விசாரணை செய்யப்பட்டார்.

இவ்வாறு குற்றச்சாட்டுக்காக சாட்சியம் அளிக்க வரும் ஒருவருக்கு இலங்கை பொலிஸ் வணக்கம் செலுத்தியமை குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை விசாரணைக்காக கோத்தபாய வாகனத்தில் வந்து இறங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் இது ஒரு சாதாரண விடயம் என்று கூறிவிட்டே விசாரணைக்கு சென்றுள்ளார்.

அரச பாதுகாப்பு நிறுவனமான ரக்னா ஆரக்சக்க லங்கா நிறுவனத்தின் பணியாளர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்தியமை மற்றும் அரச நிதியை சொந்த தேவைக்கு பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களே கோத்தபாய மீது சுமத்தப்பட்டுள்ளன.


3 comments:

  1. ஐயோ ஐயோ ,இதுமாட்டுமா ?டெய்லி மிரர் ல இருக்கிற வீடியோவில் மிக தெளிவாக தெரிகிறது விசாரணை என்ற பெயரில் அரங்கேறும் இவர்களின் நாடகம்.கோதபாய வரும்போது இவருக்கு கிடைக்கும் (வாகனத்தில் இருந்து இறங்கும்போது) ராஜ மரியாதையும்,கையடக்க தொலைபேசியை சுவிட்ச் off பண்ண வேண்டும் என்ற அறிவித்தலை மதியாது, சுவிட்ச் ஆப் பண்ணாமலும்,உள்ளே நுழையும் போது செல்யாட் அடித்ததும்,எந்த ஒரு டென்ஷன் இல்லாமல் வெளியே வந்ததும் மிக தெளிவாக தெரிகிறது .இந்த வழக்குகள் எல்லாம் இந்த அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு காலம் பூராவும் சொல்லிக்கொண்டு கொண்டு இருக்க நல்லது. எப்படி வசீம் தாஜுடீன் வழக்கு திசை திரும்பியதோ அதுமதி (முக்கியமான இரண்டு நபர்கள் இத்தாலிக்கு தப்பியோட்டம்) மிக விரைவில் இப்படி எமக்கு செய்தி கிடைக்கும் .

    ReplyDelete
  2. அட போங்கய்யா ! இதெல்லாம் அரசியல்ல சகஜம், போலீஸ்காரர் பழக்கதோஷத்ல சலூட் அடிச்சிட்டாப்போல, இப்ப என்னங்கற அதுக்கு.?

    ReplyDelete
  3. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!!

    ReplyDelete

Powered by Blogger.