Header Ads



வாழ்வென்றால் போராடும் போர்க் களமே...!

சோங்க்விங் நகரை சேர்ந்தவர் சென் ஸிங்கின் (48). சிறுவயதில் மின்விபத்தில் இவரது 2 கைகளையும் இழந்துவிட்டார். ஆனாலும், அவர் இன்றுவரை தன்னுடைய குறைபாட்டை எண்ணி கலங்கியது கிடையாது. 

விவசாய வேலை முதல் அனைத்து வீட்டு வேலைகளையும் தனது 2 கால்கள் மூலம் சென் ஸிங்கின் செய்து வருகிறார். தோட்டத்தில் விளைந்த சோளக்கதிர்களை சென் ஸிங்கின் 2 கால் பாதங்கள் மூலம் அறுத்து, அதன் மணிகளைக் தனது கால்விரல்களால் தனித்தனியே உறித்து, மூட்டை கட்டுகிறார். அதேபோல, தனது வீட்டில் பாத்திரங்கள் தேய்ப்பது, காய்கறிகளை வெட்டுவது, அடுப்பு பற்றவைத்து சமைப்பது உட்பட அனைத்து வேலைகளையும் சென் ஸிங்கின் கால்கள் மூலமே செய்துவிடுகிறார். 

தன்னுடைய 91 வயது அம்மாவுக்கு, தான் சமைத்த உணவை ஸ்பூனை வாயில் பிடித்தபடி சென் ஸிங்கின் ஊட்டிவிடுகிறார்.



No comments

Powered by Blogger.