Header Ads



"கொள்கை, அமைப்பு என்று பிளவுபட்டுப் பிரிந்துசெல்வதும் பித்ஆத்தான்"

-நாகூர் ழரீஃப்-

முஸ்லிம்களின் சமூக ஒற்றுமையை மையமாகக் கொண்டே ஜமாஅத் தொழுகை, ஜுமுஆத் தொழுகை, பெருநாள் தொழுகை போன்றன கடமையாக்கப்பட்டுள்ளன. இவைகள் ஊடாக தினசரி, வாராந்தம், வருடாந்தம் ஐக்கியப்பட வேண்டும் என்பதுவே ஷரீஆவின் அடிப்படை நோக்கு.

தினமும் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்று ஆர்வமூட்டியுள்ள ஷரீஆ ஜுமுஆத் தொழுகையை கட்டாயக் கடமையாக்கி ஒரு படி மேல் சென்று ஐக்கியப்படுமாறு ஏவுகின்றது.

வாராந்தம் உலகலாவிய சமூக நலன்களின் எழுச்சி, வீழ்ச்சி பற்றிய அறிக்கையைச் சமர்ப்பிப்பது போன்ற ஒரு கடமையே இதுவாகும். முக்களுக்கு இவ்வாரம் அதி அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படும் விடயங்களே இங்கு உரமூட்டப்பட வேண்டும். மொத்தமாகச் சொல்லப் போனால் வாராந்தம் இறையுணர்வையும் சமூக ஐக்கியத்தையும் மெருகூட்டும் ஒரு நிகழ்வாகும் எனலாம்.

ஊரில் பலர் வெள்ளிக்கிழமை அன்று பிறரைச் சந்தித்து பரஸ்பரம் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இது ஆன்மீக சந்திப்பபாக அமைந்து விடுகின்றது.

இவ்வுறவையும் பரஸ்பரத்தையும் உரமூட்டுவதற்காகவே இத்தினத்தில் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் படுத்துதல், ஜனாஸாக்களில் கலந்து துக்கத்தில் பங்கெடுத்தல், திருமண நிகழ்வுகளில் கலந்து சந்தோசத்தில் பங்கெடுத்தல் போன்றவற்றினை சன்மார்க்க விடயங்களாக ஆக்கப்பட்டுள்ளன.

'திக்ர்' எனும் இறைநினைவுடன் இருப்பது ஒரு முஸ்லிமின் பண்பாக அமைந்த போதிலும், குறிப்பாக வெள்ளிக்கிழமை இது பற்றி உணர்வூட்டப்பட வேண்டும். ஸூரா அல் ஜுமுஆ, ஸூரா அல் கஹ்ஃப், ஸூரா அல் முனாஃபிக்கூன் ஆகியவை ஓதத் தூண்டப்பட்டுள்ளமை, அருமை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுமாறு ஏவப்பட்டுளமை போன்ற அனைத்தும் அன்றைய தினம் இறையுணர்வும் துஆவும் நயவஞ்சகம் அற்ற தன்மை நிறைந்ததாக ஒரு முஸ்லிம் வாழப் பழக என்பதற்காகும்.

ஜுமுஆக் கடமையானது சமூக ஒழுங்கினையும் கட்டுப்பாட்டினையும் உணர்த்துவதுடன், ஊரில் உள்ள மிகப்பெரும் கூட்டம் அங்கு ஒன்று சேர்ந்து ஒரு இமாமின் நற்போதனைகள், உபதேசங்கள், மற்றும் வழிகாட்டல்களைச் செவிமடுத்து தொழுது விட்டு இறையுணர்வுடன் வீடு திரும்ப வேண்டும் என எதிர்பார்க்கின்றது.

இத்தினத்தில் குளித்து நறுமணம் தோய்த்து வென்னிற ஆடை அணிந்து கொள்வதினூடாக மனிதனது உளச்சுத்தமே இலக்காகும். ஏனெனில் சுத்தமான ஒரு சமூகத்தின் ஒரு அங்கத்தவனாகவே தானும் கலந்து கொள்ள வேண்டும் என ஒவ்வொரு அங்கத்துவனும் தூண்டப்படுகின்றான்.

பேருரை நிகழ்தப்படும் வேளை எவரும் பேசவோ, சாடைகாண்பிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை என்கின்ற அளவு இதன் மதிப்பும் தலைமைத்துவத்துக்கான கட்டுப்பாட்டு பயிற்சியும்  எம் உள்ளத்தில் பதிகின்றது.

எனவே, சமூக ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதில் இக்கடமையை விட வேறு ஒன்றும் இருக்க முடியாது. இவ்வாறு திட்டமிடப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்ட சமூகம் தத்தமது கொள்கை, அமைப்பு என்று பிளவுபட்டுப் பிரிந்து செல்வதால் இக்கடமையின் அடிப்படை இலக்கு இலக்கப்படும் பரிதாப நிலையில் எம் சமூகம் காணப்படுகின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது.

சில பித்ஆக்கள் இடம் பெறுவதாகக் கூறி பலர் பிரிந்து செல்கின்றனர். உண்மையில் பிரிந்து செல்வதும் ஒரு பித்ஆத்தான். ஏனெனில் நபியவர்களின் பொற்காலத்திலோ, நேர்வழிபெற்ற கலீஃபாக்களின் காலங்களிலோ எவரும் தனித்தனியாகப் பிளவுபட்டுப் பிரிந்து செல்லவில்லை. தான் பித்ஆ எனக்கருதும் விடயத்தில் பங்கேற்காது தவிந்து கொள்வதுடன், பொறுப்பாளிகளிடன் இவ்விடயத்தையும் சுட்டிக்காட்டி பாவத்தில் இருந்து தான் பாதுகாப்புப் பெறலாம்.

இப்பாடத்தினை ஸஹாபாக்கள் ஹஜ்ஜாஜ் பின் யூஸுபுடனும் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஜஹமிய்யாக்களுடன் சமூக ஒற்றுமையைக் கருத்திற் கொண்டு நிறைவேற்றியுள்ளமை என்பதன் ஊடாக, உளமாற சமூக ஒற்றுமையை விரும்பும் நல்லுள்ளங்கள் கற்றுக் கொள்ளலாம்.

6 comments:

  1. Rasool sal.udarnam kata navo varath ethavath oru imam rasool illa kullu bida naraham quran sahihadis padi onru seruvoom adu mudiyadu avvalavo sahiyana hadisukku murna ammalgalai kuppail podovoom ulama sabai rediya allahvidam badil solla rediya subahu tholugai mudal bida bidath anana amalgaliy malaika eddthu sella mattargal makalai bidavil kati poti naragam koti sellum ulamakal rediya irungal allah vin fire quran.hadis.iakama siyakalin kogai sunnava banngil irnnth sunna padi seyvoom rediya alipovidungal mudiyadthu paisa back round

    ReplyDelete
  2. Rasool sal.udarnam kata navo varath ethavath oru imam rasool illa kullu bida naraham quran sahihadis padi onru seruvoom adu mudiyadu avvalavo sahiyana hadisukku murna ammalgalai kuppail podovoom ulama sabai rediya allahvidam badil solla rediya subahu tholugai mudal bida bidath anana amalgaliy malaika eddthu sella mattargal makalai bidavil kati poti naragam koti sellum ulamakal rediya irungal allah vin fire quran.hadis.iakama siyakalin kogai sunnava banngil irnnth sunna padi seyvoom rediya alipovidungal mudiyadthu paisa back round

    ReplyDelete
  3. Quran hadis sariya poihadisgalil seyal paduwada islam oru iyakamum illamal seyalam sahihadis quran onru kootuvoom kafirgal quran sahiadisil sorgam poravalil vanduvitaargal name muslim bidath seydu kanukanukiran oru kuttam sorgam pohum 73il quran hadis 100 pinpatrubavargal bida seya othumai kaatugirargal nabi sonnar enraal imaam ipadi sonar fire sweet okaya

    ReplyDelete
  4. சரியாகவே சொன்னீர்கள் ழரீப் அவர்களே
    பித்அத்தான விடயங்களை மனதால் வெறுத்து சமூகம் பிளவுபடாத வகையில் ஒதுங்குவதே சிறந்தது அதுதான் மாதம்பையிலும் நிகழ்ந்துள்ளது
    எந்த இயக்கமும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் சமூகத்தின் ஒற்றுமைக்காகவும் விசுவாசமாக உழைப்பதுமில்லை பிறரை உழைக்க விடுவதுமில்லை
    வெறுமனே றியாழ்கள்களையும் தீனார்களையும் வயிறு நரம்ப சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுவார்களாக இருந்தால் இவர்களை சமூகத்தினை விட்டும் வேறுடன் கிள்ளியெறிவதுதான் சிறந்தது
    ஜம்இய்யதுல உலமாவின் ஒரே குடையின் கீழ் சகல பிரதேசங்களிலும் கிலைகளை நிறுவி அரசியலைக்கூட மாறறியமைக்கக்கூடிய மகாநிகாயாக்களைப் போன்ற அமுக்க சக்திகளாக ஒன்றினைவோம்

    ReplyDelete
    Replies
    1. ACJU sahala piradesankalilum kilaihal irukkindrana anivahutthu ontru paduvom insha allah

      Delete
  5. Munmaziriyaga irukkavendiyavargal ulamakkal . Enenraal avargalthaan markkaththai
    azigam therinthavargal . Appadi nadakkinrazaa enbathai nichchayam araynthu
    paarkka vendum . Appadi nadakkavillai enraal aduththa kattam enna ??

    ReplyDelete

Powered by Blogger.