Header Ads



பாராளுமன்றம் செல்ல பொன்சேக்கா முயற்சி..? மைத்திரியுடன் சந்திப்பு

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஜனநாயகக்கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சரத் பொன்சேகா மற்றும் ஜனநாயகக் கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில், பொன்சேகா விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து, அந்த இடத்திற்கு பொன்சேகாவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்ததுடன் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் இது தொடர்பான கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்து.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜெயதிலக்கவிடம் ராஜினாமா செய்வது தொடர்பான கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன் அவர் அதனை நிராகரித்துள்ளார்.

எவ்வாவாறாயினும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டால், அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என பொன்சேகா கோரியிருந்தாக கூறப்படுகிறது.

7 comments:

  1. இந்த நாட்டில் என்ன நடக்குது தெரிந்தவர்கள் யாரும் இருந்த கொஞ்சம் சொல்லுங்கப்பா

    ReplyDelete
  2. பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு போன பைத்தியகாரன் அங்கிருந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியரை பைத்தியகாரன் என்று சொன்னானாம் அந்த கதைதான் இந்த நாட்டில் நடக்குது.இந்த நாட்டில் தோற்றாலும் வெற்றிதான்.பயப்பிடாமல் எல்லோரும் தேர்தலில் இறங்கலாம்.jaffnamuslim வாசகர்களே என்ன சொல்கிறீர்கள்.மண்டயல்லாம் சூடவுது ஏதாவது ஒரு ஆறுதல் வார்த்தைகளை யாராவது சொல்லிங்கள்.

    ReplyDelete
  3. Only Azwar Haji is left out.........................................

    ReplyDelete
  4. என்னய்யா இது ஒரு பூதத்தை ஒருவாரு மடக்கியதும்தான் தாமதம் பல பூதம் வெளிக்கிளம்புதே?

    ReplyDelete
  5. Onnume puriyala ulagathila, ennamo nadakkuthu..........

    ReplyDelete
  6. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதை விட இந்த தேசியப்பட்டியல் தேர்வு முறையை முதலில் ஒழித்துக்கட்ட வேண்டும் அப்போதுதான் நாடு உருப்படும்

    ReplyDelete

Powered by Blogger.