Header Ads



ரணிலின் அதிரடி உத்தரவு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரேனும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணுகின்றார்களா என்பது குறித்து விசாரணை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்கக்கோனுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி புளுமென்டல் பிரதேசத்தில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

குற்ற விசாரணைப் பிரிவின் புலனாய்வுப் பிரிவு, மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட தரப்புக்களின் ஊடாக தகவல்கள் திரட்டப்பட உள்ளன.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணுகின்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த விடயம் குறித்த அறிக்கை எதிர்வரும் வாரமளவில் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேராவின் கூற்று தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் புளுமென்டல் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் டிலான் பெரேரா கருத்து வெளியிட்டிருந்தார்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்திருந்தனர்.

இந்த மோதல் சம்பவம் இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் என டிலான் பெரேரா தெரிவித்திருந்தார்.

இந்த கூற்று தொடர்பில் டிலானிடம் வாக்கு மூலமொன்றை பதிவு செய்யுமாறு அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, இந்த மோதல் சம்பவம் இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டதாக புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.