Header Ads



முஸ்லிம்களுக்கு கொடுக்கத் தவறிய ரணிலும், அள்ளிக்கொடுத்த மைத்திரியும்..!!

(AAM)

நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலையடுத்து எழுந்த தேசியப்பட்டியல் ஆரவாரம் தற்போது ஓய்ந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த 13, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்டமைப்புக்கு கிடைத்த 12 தேசியப் பட்டியல் ஆசனங்களும் தற்போது பங்கு போடப்பட்டாயிற்று.

இத்தேர்தலில் 90 சதவீதமான முஸ்லிம்கள் அல்லது அதற்கும் அதிகமான முஸ்லிம்கள் பிரதம ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு தாராளமாக வாக்களித்துள்ளனர். ரணில விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளில்கூட கணிசமானவை முஸ்லிம்களினதாகும்.

இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியும், அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் தேசியப் பட்டியலில் முஸ்லிம்களை அதிகளவில் உள்ளீர்ப்புச் செய்திருக்கலாம்.

எனினும் துரதிஷ்டவசமாக ஐக்கிய கட்சியானது தனது எந்தவொரு நேரடி முஸ்லிம் வேட்பாளருக்கும் தேசியப்  பட்டியல் வழங்காது திட்டமிட்டு ஏமாற்றியுள்ளதோ என சிந்திக்கத் தோன்றுகிறது.

முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதன் காரணமாக அவ்விரு கட்சிகளுக்கும் 3 தேசியப் பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட்டன.

அதற்காக முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் சட்டத்தரணி சல்மான், டாக்டர் ஹபீஸ் ஆகியோரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நவவியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட மூவரும் 2 முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளேயன்றி, ஐக்கிய தேசியக் கட்சியின் நேரடி வேட்பாளர்கள் அல்ல என்பதாகும்.

அதேவேளை ஜனாதிபதி மைதிரியோ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்று நன்கு அறிந்தும், தேர்தலுக்கு முன்னரே முஸ்லிம்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு வாக்களிக்கமாட்டார்கள் என முன்னாள் மகிந்த ராஜபக்ஸவுக்கு அறிவித்தும் இருந்தார்.

இறுதியில் தேர்தலின் பின்னர் சுதந்திர கட்சியின் நேரடி வேட்பாளர்களான பௌஸி, பைஸர் முஸ்தபா மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை தேசியப் பட்டியலில் உள்ளீர்ப்புச் செய்துள்ளார்.

ஆகமொத்தத்தில் இலங்கை முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ரணிலுக்கும் அள்ளிக்கொடுத்தும்,  தமது நேரடி வேட்பாளர்கள் எவருக்கேனும் பட்டியல் வழங்க மறுத்துள்ளமை தெளிவாகிறது.

மாறாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கோ, அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட மைத்திரி ஆதரவானவர்களுக்கோ முஸ்லிம்கள் வாக்குகளை அள்ளிக்கொடுக்கவில்லை என்ற போதிலும் 3 முஸ்லிம்களை தேசியப் பட்டியலில் உள்ளீர்ப்புச் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

(இந்த கட்டுரையானது UNP, தனது நேரடி தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக எவரையும் உள்ளீர்ப்புச் செய்யவில்லை என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறது. உதாரணமாக முன்னாள் அமைச்சர்களான இம்தியாஸ் பார்க்கீ மார்க்கார், மன்சூர், பாருக் இப்படி பல உள்ளனர்.

15 comments:

  1. மைதிறியோ அல்லது மக்கள் ஐக்கிய முன்னணியோ முஸ்லிம்களுக்கு வழங்கிய தேசியப்பட்டியல் நியமனம் எதிர் காலத்தில் முஸ்லிம்களையும் தமது கட்சியின் பக்கம் ஈர்த்துக் கொள்வதற்கான ஒரு அரசியல் முதலீடாகவும் கருத்தில் கொள்ளலாம். அதே நேரம் இவர்கள் மூவரும் தொடர்ந்தும் மக்கள் ஐக்கிய முன்னணியுடனேயே தொடர்ந்தும் இருந்தார்கள் என்பதும் சுட்டிக் காட்ட வேண்டிய விடயமாகும்.

    ReplyDelete
  2. Do not count MUSLIM MINISTERS by Name, but by their ACTION toward MUSLIM Community in the past ?

    ReplyDelete
  3. Insha Allah aduthu m3 than sariya iruntha Muslim gal maranum oru katchithan irukkama samudaya nalan Mardi vote pannanum

    ReplyDelete
  4. ஆனாலும் இஸ்லாமிய BBS தலைவர்,ஹிஸ்புல்லாவுக்கு இப் பதவி வழங்கப் பட்டமையானது மைத்திரிபால முஸ்லிம்களுக்கு செய்த துரோகமே ஆகும்

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு ஹிஸ்புல்லாவின் வக்காலத்து சரியாக தெரியவில்லை என நினைக்கிறேன். பாவம் ஜனாதிபதி இதுவரை நல்ல மனிதர்

      Delete
  5. ஒரு விடயத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் மூன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் தேசிய பட்டியல் பிரகாரம் முஸ்லிம் காங்கிரசுக்கோ தேசிய காங்கிரஸ்க்கோ என்று பார்க்க முடியாது ஏன் என்றால் இவர்கள் வாக்கு கேட்டதும் மக்கள் வாக்களித்ததும் ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்துக்குத்தான்.ஒரு பெரும்பான்மையான கட்சி என்ற வகையில் அந்த கட்சியின் கொள்கை அடிப்படையில்தான் கணக்கு பார்ப்பார்கள்.வழங்கப்பட்டிருக்கும் மூன்று பேரும் முஸ்லிம் கட்சிகளும் அங்கத்தவர்களாக இருந்தாலும்.அவர்களின் தேர்தல்கள் சம்மந்தமான சகல நடவடிக்கைகளும் ஐக்கிய தேசிய கட்சியின் வழிமுறைகளே.இத எல்லாம் நாம் தேர்தலுக்கு முன் யோசித்து தனியாக கேட்டிருக்க வேண்டும்.அப்படி தனியாக கேட்கப்பட்டிருந்தால் சிலவேளை இப்போது பல கோணத்திலும் நமக்கு கிடைத்திருக்கும் பிரதிநிதித்துவம் கூட கிடக்க வாய்ப்பில்லாமல் பொய் இருக்கலாம்.ஏன் நம்மவர்களின் ஒற்றுமைஇன்மை ஒருவரை ஒருவர் போட்டு தாக்கியது.இவைகள் எல்லாம் நாம் யோசித்து பார்க்க வேண்டும்.அடுத்து ஜனாதிபதி மைத்திரி தாராளமாக கொடுத்துள்ளார் என்றால்,அவர் ஒரு நன்றி உள்ள மனிதன் என்றுதான் சொல்ல வேண்டும்.அவரை இந்த இடத்துக்கு கொண்டு வருவதற்கு மிகப்பெரும் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள் என்பதை அடிமனதில் வைத்து செயல் படுகிறார்.அதேவேளை சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அதாவுல்லாஹ் ஹிஸ்புல்லாஹ் போன்றோர்கள் ஐம்பது வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய ஹிஸ்புல்லாஹ்வுக்கு.வழங்கியுள்ளார்.இதுவும் ஒருவகையான அரசியல் தூர நோக்குத்தான் காத்தான்குடியில் எதிகாலத்தில் சுதந்திர கட்சியை காலுன்ற செய்வதற்கு ஹிஸ்புல்லாஹ் இன்றியமையாத ஒருவர்.ரணிலோ மைத்திறியோ எவ்வலவோ மஹிந்தையை எதிர்த்தாலும் தத்தமது கட்சிகளுக்கு பாதிப்பு வராத வகையில்தான் காய் நகர்த்துவார்கள் ,நகர்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்.அதை குறையாக கூற முடியாது அது அவர்களின் கடமை.அகவே முஸ்லிம்களாகிய நாம் கொஞ்சம் பொறுமையோடுதான் காய்நகர்த்த வேண்டும்.அதை விடுத்து ஒவ்வொன்றையும் சுட்டிக்காடிக்கொண்டு இருந்தால்.வெளியில் இருக்கும் பெரும்பான்மை மக்கள் நம்மீது எதிப்பை காண்பிக்க ஆரம்பித்து விடுவார்கள் அப்போது அரசாங்கம் பெரும்பான்மைக்கு தலைசாய வேண்டிய இக்கட்டான நினக்கு தள்ளப்படும் என்பதை மனதில் கொள்வோமாக.

    ReplyDelete
  6. What happend to happened to Imtiyaz bakeer makar

    ReplyDelete
  7. போங்க Mustafa Jawfer, பின்னிட்டீங்க,நான் சொல்ல நினைத்ததை சொல்லிடிங்க .நடுநிலையான பாராட்ட பட வேண்டிய ஒரு ஆய்வு.

    ReplyDelete
  8. namma mp mara nambi parliament nadatha mudiyathu.............aakal marathula thongki, vittrilaila aadi,kuthiraila eri,mail la vanthu elephant la savari saivanga enna....heeeeee

    ReplyDelete
  9. இந்த விடயத்தில் எப்படி வேண்டுமென்றாலும் நாம் பேசிக்கொள்ளலாம், ஆனால் , ஆசாத் சாலிக்கு ஒரு MP சீட் கொடுக்க வில்லை என்றால் அது ரணில் ஆசாத் சாலிக்கு செய்யும் பெரிய துரோகம்

    ReplyDelete
  10. Ranil : Pro Western Wijwardana family
    Educated Arrogant with Artificial
    Tooth past ad smile His relation
    With Muslims is just for political

    Expedience. ????

    The way he smiles trying to hide
    Something sinister ??

    M3 : Simple Down to earth Agricultural
    Background His smile gives away
    His rural innocence.

    ReplyDelete
  11. yaar enna sonnalum perumpaanmai kachikalin ethirkala ilakku vada kilakkil avarkalin aathikkaththai melonka seivathaakum ithatkaana kaai nakarththale ivvaaraana ullakkalai ulvaankuvathaahum

    ReplyDelete
  12. இப்ப பாளிமண்டில் அங்கம் வஹிப்பவர்கள் மகிந்த காலத்திலும் அங்கம் வஹிந்தவர்கல்தான் முஸ்லிம்களுக்கு அநியாயமா நடக்கும் பொது தமது கதிரைக்கு பாதிப்பு இல்லாமல் தான் செயற்பட்டார்கள் அனால் ஆசாத் சாலி அவ்வாறு அல்ல இதை கலிமா சொன்ன முஸ்லிம்கள் யாரும் மறக்க மாடார்கள் அவர் தனியாக கேட்டு இருந்தால் நிச்சயம் வேண்டு இருப்பார் சகல முஸ்லிம் அரசில வாதிகளை விடவும் வோட் எடுத்து இருப்பார்

    ReplyDelete
  13. Pohappoha Purium Inda Ranilin Vesham???????????????

    ReplyDelete

Powered by Blogger.