Header Ads



வெற்றியில் முஸ்லிம்களும், பங்காளிகளாக வேண்டும் - பெரோஸா

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே தான் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ள கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் பெரோஸா முஸம்மில் தான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் பெண்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

கொழும்பு மாளிகாவத்தையில் வேட்பாளர் பெரோஸா முஸம்மிலுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தான் பிரதிநிதித்துவம் வகிக்கும் ஐ.தே.கட்சி எப்போதும் பெண்களுக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் முன்னுரிமை கொடுத்தே வருகின்றது. இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு கட்சிக்கும் இல்லாத பலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கே இருக்கின்றது. 1948ம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்த கையோடு தேசபிதா டி.எஸ். சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியில் சகல சமூகத்தவரும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இந்த வரலாறு இலங்கையிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் கிடையாது.

இனவாதத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் துணைபோகமாட்டாது, இடமளிக்கப்போவதுமில்லை. இலங்கையில் வாழுகின்ற சகல சமூகத்தவரையும் சரிநிகர் சமானமாக நோக்குவதே ஐக்கிய தேசியக் கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும். இதனை கட்சியின் யாப்பில்கூட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சி கொடியின்கீழ் இணைந்துள்ளோம். ஆகஸ்ட்17ம் திகதி வரலாறு காணாத வெற்றியை நாம் ஈட்டுவது உறுதி. இந்த வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளிகளாகமாற ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

No comments

Powered by Blogger.