Header Ads



பள்ளிவாசல்கள் பதிவை, இலகுவில் செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் - ஹலீம்

 (மொஹொமட் ஆஸிக்)

மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த கால அரசில் எதனோல் போதை பொருள் ஆகியவற்றை கண்டேனர் கனக்கில் கொண்டு வந்து நாட்டை ஒரு போதைப் பொருன் தேசமாக மாற்றி இனைஞர்களை அழிவுப் பாதையில் கொண்டு சென்றனர் என்று கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரும் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சருமான எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.

அக்குறணை கஸாவத்தை பிரதேசத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில்  உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையதற்றிய அமைச்சர் ஹலீம் இவ்வாறும் தெரிவித்தார்.

கடந்த அரசு காலத்தில் நாட்டுக்கு போதை பொருளும் எத்தனோலும் கண்டேனர் கனக்கில் கொண்டு வந்தனர். ஐக்கிய தேசிய கட்சி அரசு காலத்தில்  ஒரு சிறு தொகை போதைப் பொருள் பொலீஸார் கண்டு பிடித்தால் அது பாரிய சம்பவமாக கருதப்பட்டது. ஆனாலும். கடந்த அரசு கண்டேனர் கணக்கில் கொண்டு வந்து இளைஞர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கியதுடன், கல்விக்காக ஒதுக்கும் பணத்தை குறைத்து கல்வியை மட்டுப்படுத்தினர். இதன் மூலம் அறிவற்ற, போதைப் பொருளுக்கு அடிமையான ஒரு இளைஞர் சமூகத்தை உறுவாக்கி அதன் மூலம் தொடர்ந்தும் அவர்கள் அதிகாரத்தில் இருப்பதற்கு திட்டமிட்டனர். ஆனாலும் அது அவர்களுக்கு பலனளிக்க வில்லை.

எனக்கு கிடைத்துள்ள முஸ்லிம் சமய விவகார அமைச்சு கடந்த காலங்களில் செயலிலந்திருந்த ஒரு அமைச்சாகவே இருந்தது. அமைச்சு ஒன்று இருந்த போதும் முஸ்லிம்கள் தமது மார்க்க விடயங்களில் பாரிய சவால்களை எதிர் நோக்கினர். பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. அவ்வாரான சந்தர்ப்பங்களில் நீதி கேட்டு சென்ற போது அப் பள்ளி பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி முதலில் விசாரிக்கப்பட்டது.
அவ்வாறு அன்று ஒரு குறிப்பிட்ட அளவு பள்ளிவாசல்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. இன்று நாங்கள் பள்ளிவாசல்கள் பதிவை இலகுவில் செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதே போன்று வக்பு சபையையும் மாற்றி அமைத்து அதனை மாவட்ட ரீதியாக கூடி பள்ளிகள பதிவை துறிதப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றம் அவர் கூறினார்.

இத் திட்டங்களை தொடர்ந்து செய்வதற்கு ஒரு பலம் வாய்ந்த  ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அவசியமாக உள்ளது. என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.