Header Ads



தமிழ் எம்.பியின் முன்மாதிரி நடவடிக்கை - முஸ்லிம் எம்.பி.க்களும் பின்பற்றுவார்களா..?

தனது பாராளுமன்ற மாதாந்த சம்பளம் அனைத்தும் அம்பாறை மாவட்ட கல்வி வளர்ச்சிக்கே..!! எனக் கூறிய றொபின் என அழைக்கப்படும் கவீந்திரன் கோடீஸ்வரன் தமிழ் தேசியகூட்டமைப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...

தான் பாராளுமன்றத்துக்கு மக்களால் தெரிவாகி சென்றால் எப்படியான வேலைத்திட்டங்களை மேற்கொள்வேன் என்பதை ஏற்கனவே துண்டுப்பிரசுரம்மூலம் மக்களுக்கு தெளிவு படுத்தி இருந்தார்.

1)    தனது பாராளுமன்ற மாதாந்த முழுச்சம்பளத்தையும் அம்பாறை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்துவேன்

2)    பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் வறிய மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு.

3)    தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு கல்விச்செலவுக்கான மாதாந்தக்கொடுப்பனவு

4)    அரசியல் கைதிகளின் விடுதலை.

5)    அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள்  எப்படிப்பட்ட தேவைகளுக்கு எந்நப்பிரதேசங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதை புத்திஐீவிகள் குழு அமைத்து அவர்கள்மூலமே தீர்மானித்து ஒதுக்கீடுகளை மேற்கொள்ளல்.

6)    பொத்துவில் தொடக்கம் சங்கமன்கண்டிவரையிலான தமிழ் பிரதேசங்களை உள்ளடக்கி பிரதேசசபையும் பிரதேச செயலகமும் ஏற்படுத்தல்.

7)    உலகத்தமிழர்களை இணைத்து எமது மக்களின் முன்னேற்றத்துக்கு உழைத்தல்.

8)    தன்னால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் தட்டங்களின் செலவீடுகள் வெளிப்படைத் தன்மையுடன் அனைவரும் அறியும் வகையில் வெளிப்படுத்தப்படும்... போன்ற பல் வேறு விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் தேர்தலுக்கு முதல் கூறிய விடயங்களை வெற்றி பெற்ற பின் செய்வார் என்று நம்பிக்கை வைக்க வேண்டும்... இங்கே தேர்தலில் முதன் முறையாக தேர்வு செய்யப்படும் ஒருவர் இத்தகைய செயற்திட்டங்களை வெளிப்படைத் தன்மையுடன் நடைமுறைப் படுத்த தயாராகும் போது 2க்கு மேற்பட்ட தடவைகள் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் அமையுமா?

ஏற்கனவே மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன் தனது மாகாண சபைச் சம்பளத்தை கடந்த 2 வருடங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவருவதாக அவரது கட்சித் தரப்புகள் கூறுகின்றன...

தவிரவும் தற்போதைய சந்தை மதிப்பில் 43 கோடி ரூபாய் பெறுமதியான 236 பரப்பு காணியை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு வழங்கியிருப்பதாக அந்த நிறுவனத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன....

1 comment:

Powered by Blogger.