Header Ads



ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பும், ஆபத்தும்...!

-நஜீப பின் கபூர்-

மைத்திரி ஜனாதிபதியானதில் சர்வதேச போர்க் குற்றங்கள் தொடர்பான விடயங்களில் ராஜபக்ஷக்களுக்கு பாதுகாப்புக் கிடைத்திருக்கின்றது என்பது எமது கருத்து. எனவே எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு எதிரான பிரேரனைகள் சர்வதேச அரங்குகளில் முன்வைக்கப்படுகின்றபோது இதுவரை மனித உரிமைகள் போர்காலக் குற்றங்கள் என்ற குரல் கொடுத்த மேற்கு நாடுகள் இலங்கைக்கு ஆதரவான போக்கை கடைப்பிடிக்கும் என்பது தற்போது நிரூபனமாக வருக்கின்றது. அதேபோன்று வழக்கம்போல் சீனா இலங்கை சார்பிலேயே குரல் கொடுக்கும் இந்திய கூட புதிய ஆட்சியாளர்களுக்கு ஒரு வாய்பைக்- காலத்தைக் கொடுத்துப் பார்ப்போம் என்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் எனவே வழக்கம் போல் இளவு காத்த கிளியின் கதைதான் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பான விவகாரங்களும் இருக்கும் என்றுதான் எதிர்பார்க்க வேண்டி இருக்கின்றது. 

இந்தப் பின்னணியில் மைத்திரியின் தேசிய அரசு திட்டப்படி ஐக்கிய தேசியக் கட்சியையும் சுதந்திரக் கட்சியையும் இணைத்;து தேசிய அரசை முன்னெடுப்பது என்று தற்போது உறுதியாகி இருக்கின்றது. இந்த விடயம் எம்மைப் பொறுத்தவரை நாங்கள் ஆளும் தரப்பிலும் இருப்போம் எதிர்த்தரப்பிலும் இருப்பபோம், என்ற விடயம் நாம் அறிந்து வரை உலக அரசியல் வரலாற்றில் முதல்  பரீட்சார்த்தம் என்று தெரிகின்றது. 

அப்படியானால் அடுத்த பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டிருக்கின்ற சம்பந்தர் தலைமையிலான தமிழரசுக் கட்சிக்குதான்  எதிர்க் கட்சித் தலைமை சென்றடைய வேண்டும். இது விடயத்தில் ஜேவிபி தமிழரவுக் கட்சிக்கு இந்த எதிர்க் கட்சி தலைமைத்துவம் செல்வதை தாம் ஒரு போதும்  எதிர்க்கப் போவதில்லை அது அவர்களது உரிமை என்றும் கூறி இருக்கின்றது. அதே பேன்று பல சிங்கள புத்தி ஜீவிகளும் அதே நிலைப்பாட்டில் தமது கருத்துக்களை வெள்ளிப்படுத்தி வருக்கின்றார்கள். விமல் வீரவன்ச, தினேஷ் குனவர்தன, போன்றவர்கள் தமிழரசுக் கட்சிக்கு இந்தப் பதவி போய்ச் சேர்வது சிங்கள இனத்துக்குப் பெரும் ஆபத்த என்று ஒப்பாறி வைக்கத் துவங்கி இருக்கின்றார்கள்.

தேசிய அரசியல் விவகாரம் அப்படி இருக்க தமிழர்களைப் பொறுத்தவரை போர்காலகக் குற்றங்கள் மீதான சார்வதேச விசாரணை ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விவகாரமாக இதுவரை இருந்து வந்தது. என்றாலும் நாம் முன்பு குறிப்பிட்டது போன்று அந்த விடயத்தில் தற்போது அதிக நம்பிக்கை வைகக்க முடியாது.

தேர்தல் காலங்களில் ராஜபக்ஷக்கள் மின்சாரக் கதிரை சர்வதேச விசாரணை என்ற கோஷங்களை முன்னிருத்தியே வாக்கு வேட்டைகளை மேற் கொண்டு வந்தார்கள். என்றாலும் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் இந்த விவகாரம் சந்தையில் விலைபோக வில்லை என்பது தெளிவாகத் தெரிக்கின்றது. 

இந்த நிலையில் ராஜபக்ஷ மீண்டும் அரசியல் அரங்கில் இருந்து மக்கள் தன்னை ஓரம் கட்டி வருக்கின்றார்கள் என்று நன்றாக அறிந்து கொண்டும் அவர் தொடர்ந்தும் அதில் வந்து தலையை நுழைத்துக் கொள்ள முயன்று வருவது தற்போது அவர் மீதுள்ள ஊழல் கொள்ளை மோசடி படுகொலைகள்! போன்ற குற்றச்சாட்டுக்கிளில் இருந்து தனும் தன்னைச் சார்ந்தவர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு உத்தியாகவே அவர் தற்போது அரசியலை பாவிக்க முனைகின்றார் என்று தெளிவாகத் தெரிகின்றது. இதற்கிடையில் மஹிந்த அரசுக்கு எதிராக 7000 குற்றப் பதிவுகள் கிடப்பில் இருக்கின்றது. அத்துடன் நேரடியாக அவர் மற்றும் அவர் குடும்பத்துடன் தொடர்புடைய வழக்குகள் பல நூறு இருக்கின்றது என்று தெரிகின்றது.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை ஒரு விசாரணைக்காக அழைக்கப்பட்ட பீ.ஜயசுத்தர ஊடகக்காரர்களைக் கண்டு பின்கதவால் ஓடியதை தொலைக் காட்சியில் பார்க்கக் கூடியதாக இருந்தது. இது பல நூறு கோடிகள் தொடர்பான மஹிந்த ஊழல் விவகாரம் சம்பந்தப்பட்ட விடயம். மேலும் பொது மக்கள் பணத்தில் தமது பெற்றோர்களின் சமாதிகளை 600 மில்லியன்கள் செலவு செய்த விவகாரத்தை தவாறென ஏற்றுக் கொள்கின்ற  அவர்கள் அந்தப் பணத்தைத் திருப்பி ஒப்படைப்பதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக தெரிகின்றது. ஆனால் இவ்வளவு பெருந் தொகையான பணத்தை சட்டத்துக்கு முரணாக செலவு செய்ய அதிகாரிகள் எப்படி அங்கிகாரம் வழங்கினார்கள் என்பது தற்போது அவர்கள் எதிர் நோக்ககின்ற நெருக்கடியாக இருக்கின்றது.

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்ஹ கொலை, லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் எக்னலிகொட கடத்தல் விவகாரம் தாஜூதீன் படுகொலை என்பன ராஜபக்ஷக்களின் நேரடித் தொடர்புகள் பற்றிய தற்போது கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதற்கிடையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலை பிரபல மந்திரீகர் லொக்கு சீயா அல்லது முஹம்மட் நியாஸ் என்வரின் படுகொலை என்ற விடயங்களும் தற்போது நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கினறது. இதில் ஊடகவியலாளர் எகனலிகொட அவர்களின் படுகொலை நேரடியாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் கட்டளைப்படி நடந்தது என்பதற்காக ஆதரங்கள் தற்போது கசிந்து கொண்டிருக்கின்றது. தொழிற் சங்கவாதியான ஜோசப் ஸ்டாலின் இது  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபே ராஜபக்ஷவின் கட்டளைப்படி நடந்தது என்று அடித்துக் கூறுகின்றார். 

இதில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளை விசாரணைக்காக கையளிக்க அதிகாரிகள் பின்நின்றதும் அவர்களைத் தடுப்புப் பிரிவில் வைத்து விசாரிக்க உப்புதல் வழங்க தற்போதய பாதுகாப்புச் செயலாளர் பின்னடித்தது தெடர்புபில் வெகுஜன இயக்கங்கள் குரல் கொடுத்தது மட்டுமல்லமல் சர்வதேசக் கவனமும் இது விடயத்தில் ஆர்வமாக இருக்கின்றது. அமெரிக்க ராஜதந்திரி நிஷா பிஸ்வால் எகனலிகொடவின் மனைவியைச் சந்தித்து உரையாடியது போன்ற விவகாரங்கள் செயலாளர் கடைப் பிடித்த போக்கில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றது.

எமக்குக் கிடைத்த தகவல்படி தற்போதய பாதுகாப்புச் செயலாளர் பஸ்நாயக்க மற்றும் இராணுவத் தளபதி போன்றவர்கள் ஜனாதிபதியிடம் தொடர்பு கொண்டு என்ன செய்வது என்று கேட்டிருக்கின்றார்கள் இதற்கு ஜனாதிபதி நீங்கள் அதிகாரிகள் இதனை இவ்வாறான விடயங்களில் எப்படி காரியம் பார்க்க வேண்டும் என்பதனை நீங்கள்தான் எனக்கு சொல்லித்தர வேண்டும் அதனை விடுத்து என்னிடத்தில் என்ன செய்வது என்று கேட்பது பொறுத்தமில்லாத விடயம் என்று கூறியதுடன் இந்த விவகாரங்களை சர்வதேசமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது நீங்கள் சட்டத்தை செய்யுங்கள் என்று  அவர்கள் கேட்கவந்த சலுகைக்கு பிடி கொடுக்காமல் பதில் கொடுத்ததால் வேறு வழியின்றி தற்போது குறற்ம்சாட்டப்படுகின்றவர்களை தடுப்புக்காவலில் வைத்த விசாரிக்கும் உத்தரவை இந்தக் கட்டுரையைத் தயாரிக்படுகின்ற நேரத்தில் செயலாளர் வழங்;கி இருக்கின்றார் என்று தெரிகின்;றது. 

இதற்கிடையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் சம்பந்தப்பட்ட எவன்கார்ட் விவகாரத்தில் வெளி நாடுகளுக்கு செல்வதற்காக கோத்தா மீது விதிக்கபட்டிருந்த தடை உத்தரவை காலி நீதி மன்றம் தற்போது நீக்கிக் கொண்டிருக்கின்றது எனவே வேண்டுமானால் தற்போது அவர் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள் முடியும். இந்த தடை நீக்கத்தில் தற்போது பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சீசெல்ஷ் தீவில் இலங்கை வங்கிக் கிளையொன்றைத் திறக்க எந்த விதமான தேவைகளும் இல்லாத நிலையில் அங்கு வங்கிக் கிளையொன்றைத் திறந்தது ராஜபக்ஷக்களின் கறுப்புப் பணத்தை சட்டரீதியான பணமாக மற்றிக் கொள்ளும் ஏற்பாடு என்று கருதப்படுகின்றது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை பரீசிலிப்பதற்கு தற்போது நீதி மன்றத்தில் உத்தரவுகள் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 

தேர்தல் காலத்தில் பல நுறு மில்லியன் செலவில்  நீர் கொழும்பில் நடாத்தப்பட்ட ராஜபக்ஷவின் அரசியல் கூட்டத்திற்கு செலவு செய்யப்பட்ட  பணம் தொடர்பாக தற்போது விசாரணைகள் துவங்கி இருக்கின்றது.  மேலும் இலங்கை போக்குவரத்து பஸ் வண்டிகளை அரசியல் தேவைகளுக்காக பாவித்து அதற்குக் கொடுக்கபட வேண்டியப பல கோடி ரூபாய்கள் தொடபில் தற்போது விசாரணைகள் துவங்கி இருக்கின்றது முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசிலுக்கு எதிரான வழக்குத் தாக்கள் செய்யப்பட இருக்கின்றது எனவே அவரும் ராஜபக்ஷவுக்கு எதிரான ஒரு சாட்சியாளராக மாற இடமிருக்கின்றது.

இதே போன்று தொலைக் காட்சி நிறுவனங்களில் தேர்தல் காலங்களில் மேற் கொள்ளப்பட்ட பிரச்சாரங்களுக்கு பல கோடி ரூபாய்களை ராஜபக்ஷ இன்னும் கொடுப்பனவு செய்யாமல் இருக்கின்றார். இது பற்றியும் தற்போது முறைப்பாடுகள் கொடுக்கபட்டிருக்கின்றது. எனவே சர்வதேச அரங்கில் மைத்திரியின் வரவு ராஜபக்ஷவுக்கு ஒரு பாதுகாப்பான நிலையைக் கொடுத்தாலும் உள்நாட்டில் அவர்மீதான விசாரணைகள் கடிமாகி வருகின்றது என்று தெரிகின்றது.

No comments

Powered by Blogger.