Header Ads



கோடிக்கணக்கான ரூபாவுக்கு விலை பேசப்படும் புதிய எம்.பி.க்கள் - களத்தில் குதித்த பண முதலைகள்

பொதுத் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் ஆட்சியமைக்கும் வகையில் அறுதி பெரும்பான்மை கிடைக்காது என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க இரு கட்சிகளை சேர்ந்த வர்த்தக பிரமுகர்கள் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுத் தேர்தல் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு கருத்துக் கணிப்புகளுக்கு அமைய இரு பிரதான கட்சிகளுக்கு இடையில் நேருக்கு நேரான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் பிரதிநிதிகளை இணைத்து கொண்டு அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரதான கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளில் போட்டியிடும் தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நபர்களிடம் இரகசியமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பல்வேறு சிறப்புரிமைகள், அமைச்சு பதவிகள், பணம் என்பவற்றை வழங்குவதாக இரு பிரதான கட்சிகளும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. நாட்டில் உள்ள சில பிரதான வர்த்தகர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் இதில் தலையீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் புதிய நாடாளுமன்றம் கூடும் செப்டம்பர் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோடிக்கணக்கான ரூபாவுக்கு விலை போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

Powered by Blogger.