Header Ads



'குதரத் ஹெல்த் ஹெயார் வைத்திய நிலையம்'


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

'குதரத் ஹெல்த் கெயார் சென்டர் திறப்பு விழாவில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டபின் கலந்து கொண்ட முதலாவது நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. முகாமையாளர் ஸமீர் நக்கீப், தலைவர் அல்ஹாஜ் நக்கீப், மௌலவிகளான அப்துல் மாலிக், ஸிக்குருல்லா, அர்ஸாத் மற்றும் வைத்தியர்களான அமீர் அலி, ஸர்மிலா நவாஸ் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

தெஹிவளை மிலேனியம் அவனியுவில் 'குதரத் ஹெல்த் ஹெயார் வைத்திய நிலையம்' வெள்ளிக்கிழமை (28) திறந்து வைக்கப்பட்டதுடன் இயற்கையாக பெற்றுக்கொள்ளக்கூடிய உற்பத்திப் பொருட்களைக் கொண்டு சகல நோய்களுக்குமான நிவாரணங்களை வழங்குவதற்கு இந்த சிகிச்சை நிலையம் முன்வந்துள்ளதுடன் பூரணமான உடல் ஆரோக்கியத்தை பெறக்கூடிய சிகிச்சைகளை வழங்குவதுடன் நோய்கள் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிமுறை ஆலோசனைகளையும் இந்நிலையம் வழங்குகின்றது.

குறிப்பாக பீனிசம், கபம், ஒற்றைத் தலைவலி, பக்கவாதம், தலைவலி, அஜீரண வியாதி, இடுப்பு வலி, நீரிழிவு, கொலஸ்ட்ரோல், புற்றுநோய், சிறுநீரகக் கல், பித்தப்பைக் கல், மலட்டுத்தன்மை, மூட்டு வலி, ஓழுங்கற்ற மாதவிடாய், ஆஸ்துமா, தோல் நோய்கள், மன அழுத்தம், மலச்சிக்கல், மூல நோய் போன்ற நோய்களுக்கு தேர்ச்சி பெற்ற வைத்தியர்களினால் சிறந்த சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஹிஜாமா என்பது அதியசமான வைத்திய முறையாகும்

அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு அளித்திருக்கும் சிறந்த அருட்கொடைகளில் ஆரோக்கியம் என்பது இன்றையமையாததாகும். ஒரு மனிதன் அவனுக்கு கொடுக்கப்பட்ட ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அவனின் மீதுள்ள தலையாய கடமையாகும். எப்பொழுது அவன் தன் ஆரோக்கியத்தைப் பற்றி கவனயீனமாக இருப்பானோ அல்லது அவனறியாமல் ஆரோக்கியத்திற்கு இடையூறு ஏற்படுமோ அப்பொழுது அவனுக்கு நோய் ஏற்படும். அந்த நோயை குணப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிக்கு வைத்தியம் அல்லது மருத்துவம் எனப்படும். இன்று உலகளாவிய ரீதியில் வைத்திய முறையில் மிகச் சிறந்து விளங்கும் முறைதான் இரத்தம் குத்தியெடுத்தல். இதனை அறபியில் ஹிஜாமா என்றழைப்பர்.

ஹிஜாமா என்றால் என்ன?

ஹிஜாமா என்றால் ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக அல்லது அவனுக்கு ஏற்பட்டிருக்கும் நோயை நீக்குவதற்காக ஒரு மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்கி நிற்கும் இரத்தத்தை சத்திர சிகிச்சையில்லாமல் வெளியேற்றுவதாகும். இது கி.மு.3000 வருடங்களுக்கு முன்பு நடைமுறையில் காணப்பட்ட அனுபவ ரீதியான முறைமாத்திரமல்லாமல் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகைக்குப் பின்னால் ஹிஜாமா செய்வது நன்மைக்குரிய செயலாகவும் ஆக்கப்பட்டது.

ஹிஜாமாவின் பயன்கள்

ஹிஜாமா செய்வதின் மூலமாக உடம்பில் ஏற்படும் 70 சதவீதமான நோய்களுக்கு அதுவும் மனிதன் பயப்படும் கேன்ஸர் போன்ற அல்லாஹ் நாடினால் மரணத்தைத் தவிர நோய் நிவாரணியாகும். பல வருடங்களாக மாத்திரைகள் எடுத்து சுகம் காணாத நோயாளிகள் ஹிஜாமாவிற்குப் பிறகு சுகம் கண்டவர்கள் ஏராளம். இதை நாம் அனுபவரீதியாக கண்டிருக்கின்றோம். இந்த முறையை எச்சமயத்தவர்களும் செய்து கொள்ளலாம். மேலும் ஹிஜாமா செய்வதனால் சில நோய்ககளிலிருந்து நிவாரணம் அடைய முடியும்.

அவையாவன,

கெட்ட இரத்தத்தினை வெளியேற்றி இரத்த ஓட்டத்தைச் சீராக்கல், ஒற்றைத் தலை வலியிலிருந்து நிவாரணம் பெறல், பாரிய நோய்களை விட்டும் தடுத்தல், பக்க விளைவுகளை நீக்கல், சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை ஏற்படுத்தல்

1 comment:

  1. வவேட்கதக்க விடயம்.

    ReplyDelete

Powered by Blogger.