Header Ads



ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதியின் பின் மைத்திரி, மகிந்தவின் கதி - அநுரகுமார விளக்குகிறார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் ஒகஸ்ட் 17 ஆம் திகதியின் பின்னர் நிறைவு பெறும் என ஜே.வீ.பி தெரிவித்துள்ளது.

கொழும்பில்  இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜே.வீ.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதியின் பின்னர், மகிந்த ராஜபக்ச உறுப்பினராக மட்டுமே செயல்படுவார்.

ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி வரை மட்டுமே மகிந்த ராஜபக்ச பிரபலமானவராக இருப்பார்.

ஆனால் ஓகஸ்ட்  மாதம் 17 ஆம் திகதியின் பின்னர் மைத்திரிபால சிறிசேன பிரபலமானவராக திகழ்வார்.

இதன் காரணமாக, ஏராளமானவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைவார்கள்.

அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பார்கள்.

இதன்பின்னர், மகிந்த ராஜபக்ச அரசியல்வாழ்கையில் மிகவும் பின்னோக்கி செல்லும் நிலைமைக்கு ஆளாவார் எனவும் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

2 comments:

Powered by Blogger.