Header Ads



வீதி விபத்துகளில் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு மாதாந்தம் 10.000

வீதி விபத்துக்களில் தமது பெற்றோரை இழக்கும் மாண வர்களுக்கு வீதி பாதுகாப்பிற்கான தேசிய மன்றம் மாதாந்தம் பத்தாயிரம் ரூபாவை வழங்க தீர்மானித்துள்ள மன்றப் பணிப் பாளர் நாயகம் திரு. கே.அனுர ரணசிங்க தெரிவித்தார்.

வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு இக் கொடுப்பனவை அவர்கள் கல்வி கற்கும் காலம் முழுவதற்கும் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை வீதி விபத்தினால் கொல்லப்படும் குடும்ப அங்கத்தவர்களுக்கு 2,00,000 ரூபா நஷ்டஈடும் அங்கவீனமடைவோருக்கு 1,00,000 ரூபா நஷ்ட ஈடும் வழங் கப்படுமெனவும் மேற்படி மன்ற பணிப்பாளர் நாயகம் அனுர ரணசிங்க தெரிவித்தார்.

வீதி விபத்துக்களை குறைக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் பத் தாண்டு கால வேலைத்திட்டத்தில் இலங்கை 31வது நாடாக இணைந்து கொண்டுள்ளது. இவ்வேலைத் திட்டத்தை நிறைவேற்ற மூன்றாம் நபர் காப்புறுதி பத்திரத்தினை கொண்டுள்ள வாகன சொந்தக் காரர்களிடமிருந்து அவர்களுக்கு வழங்கப்படும் காப்புறுதி பத்திரத்தினூடாக வருடாந்தம் 24 மில்லியனை பெற்றுக் கொள்ளவும் திட்டமிடப்பட் டுள்ளது.

No comments

Powered by Blogger.