Header Ads



UNP யில் அர்ஜுனா போட்டி, இறுதியாக மைத்திரியை சந்திக்கிறார், சந்திரிக்காவும் உயர்மட்ட பேச்சு


மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட இடமளிக்கப் பட்டதை எதிர்த்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர் ஐ. ம. சு. முவிலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ. தே. கவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக நம்பகரமாக தெரிய வருகிறது.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்காக மஹிந்தவை எதிர்த்து வெளியேறிய குழுவில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் பிரதானமானவர்.

அர்ஜுனவும் அவரோடு அப்போது வெளியேறியோரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐ. தே. க அரசுடன் நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு ஆதர வளித்தனர்.

இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ. ம. சு. மு. முன்னணியில் போட்டியிட இடமளித்ததால் அர்ஜுன ரணதுங்க உட்பட அவரோடு வெளியேறியோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

பொதுத் தேர்தலில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் ஐ. தே. க. மூலம் போட்டியிட ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பி த்துள்ளனர்.

சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க உட்பட பிரபல அரசியல் தலைவர்களும் தற்போது உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவதாக தெரியவருகிறது.

இது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கும் முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் இவர்கள் தீர்மானித்துள்ள னர். ஐ.ம.சு.முவிலிருந்து வெளியேறிய ஹெல உருமய உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 comment:

  1. இல்லை. அர்ஜுன UNP இல் சேருவது நல்ல முடிவாக அமையாது. மைத்திரியுடன் இருந்து கொண்டே ராஜிதவுடனும் சேர்ந்து ஒரு பலமான கூட்டாக இயங்குவதுதான் சிறந்தது. அப்போதுதான் நாட்டில் ஒரு சமநிலை ஜனநாயகம் முன்னெடுத்து செல்லப்படும்.

    ReplyDelete

Powered by Blogger.