Header Ads



நாகப் பாம்பிடமிருந்து பாதுகாப்புபெற முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் - விஜித்த தேரர்

நாட்டிலுள்ள முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாகவும் ஏனைய கட்சிகளுடனும் சேர்ந்து போட்டியிடுவதைவிட, ஒன்றுபட்டு ஒரே அணியில் போட்டியிடுவதன் மூலம் பலமான சக்தியாக உருவெடுப்பதுடன் பொதுபல சேனாவையும் எதிர்கொள்ள முடியுமென வட்டரக்க விஜித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு முன்னர் உலமா சபை, முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும்  கலந்துரையாட உள்ளேன். 

சிறுபான்மையினரை சீண்ட பொதுபல சேனா இப்போது நாகப்பாம்பு வடிவத்தில் உருவேடுத்துள்ளது. இந்த விசம் நிறைந்த பாம்பு தலைது!க்காமலிருக்க வேண்டுமென்றால் முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

5 comments:

  1. இதை பார்த்தாவது இந்த முஸ்லிம்கள் திருந்த வில்லை என்றால் சுய நலத்தில் மேலோங்கியவர்கள்

    ReplyDelete
  2. இனியாவது நம் முஸ்லிம் தலைவர்கள் ஓன்றுபடுவார்களா முஸ்லிமாக பிறந்து முஸ்லிம்களுக்கு சேவை செய்ய வேண்டியவேர்கள் அந்நிய மதத்தில் இரிக்கிரார்கள்

    ReplyDelete
  3. அருமையான செய்தியை விஜித்த தேரர் கூறியுள்ளார். பணம் பட்டம் பதவிக்கு அலையும் நம்மவர்கள் இதை உணர்வார்கள?????????

    ReplyDelete
  4. எமது அரசியல் வாதிகள் ஒரு நாளும் ஓன்று பட மாட்டார்கள் காரணம் சமுகத்துக்காக வேண்டி அரசியலுக்கு சென்றால் ஓன்று பாடுவார்கள் அவர்கள் சென்றது பதவிக்கும் பணத்துக்கும்

    ReplyDelete
  5. பாவம் இந்த தேரர்.எமது கட்சிகளின் தலைவர்களைப்பற்றி தெரியாதவர்.ஒன்று சேர்ந்தால் சம்பாதிக்க முடியாதே.தேர்தல் காலங்களில் மட்டும்தான் அவர்கள் சமுகத்துக்காக குரல் கொடுப்பார்கள்.நோன்புகாலத்தில் முஸ்லிம்களுக்கு பங்கிடும் ஈச்சம் பழத்தை பங்கிடுவதற்கு மட்டும்தான் ஒன்று சேர்வார்கள் என தெரியவில்லை போலும்.

    ReplyDelete

Powered by Blogger.